நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற் வரும் நிலையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்றும் சபைக்கு சமூகமளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதோடு , நேற்று முன்தினமும் சபைக்கு வரவில்லை என்றும், இது சபையை அவமதிக்கும் செயற்பாடாகும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

இதேவேளை ஏற்கனவே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் இந்த கேள்வி சபையில் எழுந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் நிதி அமைச்சரின் வருகையின்மை குறித்து முறைப்பாட்டையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தின் போதும் , நிதியமைச்சர் பிரசன்னமாகாமை தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி