'ஒரே நாடு 'ஒரே சட்டம்' -குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நியமனமானது முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளை, அட்டம்பிட்டியவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு குழுவின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பது முற்றிலும் முட்டாள்தனமானது. தேரர் செய்த சில தவறுகள் இருக்கலாம் அந்த தவறுகளுடன் குழுவின் தலைவர் பொருப்புக்கு தேரர் பொருத்தமானவர் அல்ல. துறவிகளில் சில உண்மை இருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்ட குழுவின் தலைவராக இருக்க தகுதியானவர் அல்ல. அந்த நியமனம் முட்டாள்தனமானது” என திலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

(lanka C news)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி