Tamil Leader News
முக்கியம்
KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●
செய்திகள்

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

T

The Leader Desk

ஜூலை 20, 2023 • 7:01 AM

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
  • இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.
  • பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.
  • இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான நேற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.
எழுத்து அளவு:

வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான நேற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 82 ஓட்டங்களையும் Nishan Madushka 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Noman Ali, Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நான்காவது நாள் ஆட்டம் நிறைவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில்,  போட்டியின் இறுதி நாளான இன்று ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.  

பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் ஹுல் ஹக் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

 அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி | Tamil Leader | We Lead the Nation