சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பாக விசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டரிலும் அதன் எடை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டரில் எடையை குறிப்பிடாமல் சமையல் எரிவாயு நிரப்புதல், களஞ்சியப்படுத்தல், விநியோகம், சில்லறை மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்வதற்கான விலைப்பட்டியலை காட்சிப்படுத்தக்கூடாதென நேற்று (25) வெளியிடப்பட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 9.6 கிலோகிராம் (18 லீற்றர்) சிலிண்டரை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலைகள் மாவட்ட மட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

⭕ கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு 1,150 ரூபா

⭕ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1,250 ரூபா

⭕ திருகோணமலை மாவட்டத்திற்கு 1,217 ரூபா

⭕ அம்பாறை மாவட்டத்திற்கு 1,252 ரூபா

⭕ நுவரெலியா மாவட்டத்திற்கு 1,229 ரூபா

⭕ யாழ். மாவட்டத்திற்கு 1,259 ரூபா

⭕ கிளிநொச்சி மாவட்டத்திற்கு 1,243 ரூபா

⭕ முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 1,242 ரூபா

⭕ களுத்துறை மாவட்டத்திற்கு 1,158 ரூபா

⭕ புத்தளம் மாவட்டத்திற்கு 1,174 ரூபா

⭕ கேகாலை மாவட்டத்திற்கு 1,178 ரூபா

⭕ குருணாகல் மாவட்டத்திற்கு 1,177 ரூபா

⭕ காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 1,181 ரூபா

⭕ கண்டி மாவட்டத்திற்கு 1,191 ரூபா

⭕ மாத்தறை மாவட்டத்திற்கு 1,194 ரூபா

⭕ மாத்தளை மாவட்டத்திற்கு 1,195 ரூபா

⭕ ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 1,217 ரூபா

⭕ அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு 1,215 ரூபா

⭕ வவுனியா மாவட்டத்திற்கு 1,216 ரூபா

⭕ மன்னார் மாவட்டத்திற்கு 1,234 ரூபா

⭕ மொனராகலை 1,248 ரூபா

⭕ பதுளை மாவட்டத்திற்கு 1,235 ரூபா என்ற அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நேற்று (25) முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி