2015 லண்டன் மாரத்தானில் எல்லைக் கோட்ட தொட்ட எலியட் கிப்சோகி உலகத்திலேயே வேகமாக ஓடும் மனிதர் யாரெனக் கேட்டால், உசேன் போல்ட் என்ற பொதுவான பதில் கிடைக்கும். ஆனால் அந்தப் பதிலை விவாதத்துக்கு உள்ளாக்குபவர் எலியட் கிப்சோகி.

நூறு மீட்டர் தொலைவை 9.58 வினாடிகளில் ஓடிக் கடந்த உசேன் போல்ட்டின் சாதனையைப் போலவே கிப்சோகியும் சாதனை படைத்திருக்கிறார். மாரத்தான் ஓட்டப் பந்தயத்துக்கான தொலைவை 2 மணி நேரத்துக்குள் ஓடி முடித்தவர் கிப்சோகி.

மாரத்தான் என்பது 42.2 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கும் போட்டி. அதாவது நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான தொலைவைப் போல நானூறு மடங்குக்கும் அதிகமான தொலைவை ஓடிக் கடக்க வேண்டும்.

ரியோடி ஜெனிரோவில் 2016-ஆம் ஆண்டு நடந்த ஓலிம்பிக் மாரத்தான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் கிப்சோகி. மாரத்தான் தொலைவை குறைந்த நேரத்தில் ஓடி முடித்தவர் என்ற சாதனையை அவர் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

விபத்தில் சிதைந்த வலது கை; இடது கையால் பயிற்சி, இரு ஒலிம்பிக் பதக்கங்கள் - நம்பிக்கை நாயகன் கரோலே டாகாஸ்

வெறுங்கால்களில் ஓடி இந்தியாவுக்கு அபார வெற்றி தேடி தந்த தயான் சந்த்

கென்யாவின் பின்தங்கிய பகுதியில் பிறந்த கிப்சோகி தந்தையை புகைப்படத்தில் மட்டுமே பார்த்தவர். தாயின் வளர்ப்பில் வறுமையில் சிக்கியிருந்த அவர் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தவர். நான்கு குழந்தைகளில் இளையவரான கிப்சோகிக்கு எதுவும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை.

மரபணுவில் கலந்த ஓட்டம்

கென்யாவின் பல முக்கிய சாதனை வீரர்களைப் போலவே இளம் வயதில் பள்ளிக்கூடத்துக்கு ஓடியே செல்ல வேண்டிய நிலை கிப்சோகிக்கும் இருந்தது. தினமும் பள்ளிக்குப் போகவும் வரவும் ஆறரை கிலோ மீட்டர் தொலைவு ஓடியிருக்கிறார் கிப்சோகி. அதுவே அவருக்கும் நீண்ட தொலைவு ஓட்டத்துக்கான பயிற்சியாக அமைந்தது.

2001-ஆம் ஆண்டில் கிப்சோகிக்கு 16-வயதானபோது அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய பயிற்சியாளரான பேட்ரிக் சாங் என்பவரைச் சந்தித்தார். கிப்சோகியின் திறனை அவர் கண்டுபிடித்தார். நீண்ட தொலைவு ஓட்டத்துக்கு அவரைத் தயார்படுத்தினார்.

கிப்சோகி

கிப்சோகி

தனது பயிற்சியாளர் கூறும் திட்டத்தை ஒரு குச்சியைக் கொண்டு தனது கையிலேயே எழுதிக் கொள்வாராம் கிப்சோகி. சில நேரங்களில் அதை மனப்பாடம் செய்து கொள்வாராம்.

இன்று கிப்சோகி பெரும் பணக்காரர்களுள் ஒருவர். ஆனாலும் எளிமையான வாழ்க்கையில் இருந்து அவர் மாறிவிடவில்லை. கென்யாவின் ஒரு கிமாரத்தில்தான் இன்னும் வசித்து வருகிறார்.

கிப்சோகி மாரத்தானை தேர்வு செய்தது ஏன்?

தொடக்கத்தில் 3 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் போன்ற நடுத்தரத் தொலைவு ஓட்டங்களில் கிப்சோகி பங்கெடுத்தார். சில உள்நாட்டுப் போட்டிகளிலும் சில சர்வதேசப் போட்டிகளிலும் வெற்றி கிடைத்தது.

2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகளில் அவரால் சாதிக்க முடியவில்லை. தொடர் தோல்விகள் அவரை வாட்டின.

2016-ஆம் ஆண்டு பெர்லின் மாரத்தான் போட்டியை நிறைவு செய்த கிப்சோகி

இந்தத் தோல்விகளுக்குப் பிறகே நீண்ட தொலைவு ஓட்டங்களில் கிப்சோகி பங்கேற்கத் தொடங்கினார். அரை மாரத்தான், மாரத்தான் என தனது களத்தை மாற்றினார். அதற்குப் பலன் கிடைத்தது. ஜெர்மனியின் ஹேம்பர்க் மாரத்தான் போட்டியில் 2 மணி 5 நிமிடம் 30 விநாடிகளில் மாரத்தான் தொலைவைக் கடந்து பட்டத்தை வென்றார். அத்துடன் தனது கவனத்தை முழுவதுமாக மாரத்தான் நோக்கித் திருப்பினார்.

கிப்சோகி

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம்

நவீன கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதில் இருந்து இன்றுவரை நடத்தப்பட்டு வருவது மாரத்தான் ஓட்டம். ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுவது மரபு. ஒலிம்பிக்கில் சாலையில் ஓடும் ஒரே போட்டி மாரத்தான் மட்டுமே. உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான விளையாட்டு என்பதும் இதன் சிறப்பு

தொடக்க காலத்தில் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லை. சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு 1984-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில்தான் பெண்களுக்கான மாரத்தான் போட்டிகள் சேர்க்கப்பட்டது.

எலிட் கிப்சோகி 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் நடந்த மாரத்தான் போட்டிகளில்தான் முதல் முறையாகப் பங்கேற்றார். ஏற்கெனவே அவர் செய்திருந்த சாதனைகளால் தங்கப்பதக்கம் அவருக்கே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 155 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில், 2 மணி 8 நிமிடம் 44 நொடிகளில் தொலைவைக் கடந்து எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார் கிப்சோகி. அவருக்கும் இரண்டாவதாக வந்த லிலிசாவுக்கும் இடையேயான நேர வித்தியாசம் 70 நொடிகள். 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு நீண்ட இடைவெளி ஏற்பட்டது அதுவே முதல்முறை.

கிப்சோகியின் உத்தி

மாரத்தானின் முதல் பாதி தொலைவை விட இரண்டாவது பாதி தொலைவை மிக வேகமாக ஓடுவது கிப்சோகியின் உத்தி. உதாரணத்துக்கு டெல்லியில் நடந்த அரை மாரத்தான் போட்டியை 59 நிமிடம் 44 நிமிடங்களில் கிப்சோகியால் ஓட முடிந்தது. ஆனால் ரியோ ஒலிம்பிக்கின் மாரத்தான் போட்டியில் பாதி தொலைவை கடப்பதற்கு அவர் ஒரு மணி நேரம் 5 நிமிடத்துக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டார்.

ஆற்றலை சேமித்து வைத்துக் கொண்டு தேவையான போது வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற வீரர்களைக் காட்டிலும் கடைசி சில கிலோ மீட்டர்களை அவரால் மிக வேகமாக ஓட முடிகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கிப்சோகி

கிப்சோகி

மனிதர்கள் மாரத்தான் ஓடத் தொடங்கியதில் இருந்து இதுவரை யாரும் 2 மணி நேரத்துக்குள்ளாக முழுத் தொலைவையும் கடந்ததில்லை. அப்படியொரு சாதனையை கிப்சோகியால் படைக்க முடியும் என்று மாரத்தான் ஓட்ட நிபுணர்கள் நம்பினார்கள்.

2017-ஆம் ஆண்டு அந்தச் சாதனைக்கான நாள் குறிக்கப்பட்டது. இத்தாலியின் மிலன் நகரத்துக்கு அருகே கிப்சோகியுடன் வேறு இரு மாரத்தான் சாதனையாளர்களும் இந்தச் சாதனை நிகழ்வில் பங்கேற்று ஓடினார்கள். ஒரு மணி நேரத்துக்குள்ளாக பாதி தொலைவையும் இரண்டு மணி நேரத்தில் முழுத் தொலைவையும் கடக்க வேண்டும் என்பது இலக்கு. 59 நிமிடத்தில் பாதித் தொலைவைக் கடந்த கிப்சோகி இரண்டு மணி நேரம் 25 நொடிகளில் முழுத் தொலைவையும் கடந்தார். சாதனை தவறியது.

2019-ஆம் ஆண்டு மே மாதத்தில் வியன்னா நகரில் மீண்டும் சாதனை நிகழ்த்தத் திட்டமிடப்பட்டது. இதில் கிப்சோகிக்கா மட்டும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஒரு மணி நேரம் 59 நிமிடம் 40 விநாடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து சாதனை படைத்தார் கிப்சோகி. இது மாரத்தானுக்கான அதிகாரபூர்வ சாதனையாக பதிவு செய்யப்படாவிட்டாலும் கின்னஸ் உலக சாதனையப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

என்ன சாப்பிடுகிறார் கிப்சோகி?

கிப்சோகி

உணவு, பயிற்சி, தூக்கம் ஆகியவற்றுக்கு திட்டம் வகுத்து அதைக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி வருகிறார் கிப்சோகி. கிராமத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் முகாமில் அவருடன் பலர் தங்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் ஒவ்வொரு வாரத்துக்குமான திட்டம் முன்னரே வடிவமைக்கப்பட்டு விடுகிறது. ஒரு நாளும் எத்தகைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும், எத்தனை கிலோ மீட்டர் தொலைவு ஓட வேண்டும் என்பவை எல்லாம் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

கென்யாவில் உள்ள முகாமில் கிப்சோகி (வலது)

காலையில் உகாலி எனப்படும் தானிய மாவில் செய்யப்பட்ட சிற்றுண்டி, இரவில் மெதுவாக வேக வைக்கப்பட்ட மாமிசம் ஆகியவை கிப்சோகியின் உணவுப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. உணவு சாப்பிடும் நேரம் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு இரவு உணவை 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும் என்பதை கிப்சோகியும் அவருடன் இருப்பவர்களும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பயிற்சியையும், தூக்கத்தையும் ஒருநாளும் தவறவிடுவதில்லை.

"எங்களது வாழ்க்கை மிகவும் எளிமையானது. காலையில் எழ வேண்டும். ஓட வேண்டும். திரும்பி வர வேண்டும். சுத்தம் செய்வதற்கு ஏதேனும் இருந்தால் அந்த வேலையைச் செய்ய வேண்டும். பிறகு மதிய உணவு. 4 மணிக்கு மீண்டும் ஓட்டம். மாலையில் ஒரு டீ. இரவு உணவுக்குப் பிறகு தூக்கம். அவ்வளவுதான்" என்று பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் கிப்சோகி.

டோக்யோ ஒலிம்பிக்கின் கடைசிநாள், கிப்சோகியின் நாளாக அமையலாம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி