Tamil Leader News
முக்கியம்
DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●
செய்திகள்

மொட்டுக் கட்சியின் மேலும் 30 பிரபல முக்கியஸ்தர்கள் சஜித்துக்கு ஆதரவு!

T

The Leader Desk

செப்டம்பர் 10, 2024 • 5:16 AM

மொட்டுக் கட்சியின் மேலும் 30 பிரபல முக்கியஸ்தர்கள் சஜித்துக்கு ஆதரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணிலை நம்பியிருந்த மொட்டுக் கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர் என தெரிய வருகிறது.
எழுத்து அளவு:

ரணிலை நம்பியிருந்த மொட்டுக் கட்சியின் 30 இற்கும்  மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர் என தெரிய வருகிறது.

மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துவரும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடாமலும் ஆலோசிக்காமலும் அநுர குமார திசாநாயக்கவுடன் இரகசிய சந்திப்புகளை நடத்தி அநுர குமாரவுடன் அரசியல் டீலுக்கு வந்துள்ளமையே இதற்கு காரணம் என அறியமுடிகிறது. 
 
இவ்வாறு தன்னை மாத்திரம் கருத்திற்கு கொண்டு தீர்மானங்களை எடுத்து வரும் ஜனாதிபதியோடு பயணிப்பதால் தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனக் கருதி, ஜனாதிபதி தேர்தலை அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவதற்கு இத்தரப்பு முயற்சித்து வருகிறது. 
 
இதன் பிரகாரம், அதிருப்தியிலுள்ள 30 க்கும் மேற்பட்ட மொட்டு உறுப்பினர்கள் நேற்று இரவு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார, டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 
 
அடுத்தடுத்த சந்திப்புகளின் பின்னர் மொட்டுக்குக் கட்சியின் 30 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவை நல்கும் முகமாக மேடை ஏறவுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாதோரை இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. 
 
நேற்றைய தினம் கண்டியில் நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்தோடு இணைந்தார். 
 
அவ்வாறே, ரணிலின் தோல்வியைத் தொடர்ந்து அடுத்த வரும் தேர்தல்களுக்கு முகம் கொடுக்க முடியாது போகின்றமையால் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பல பிரபலங்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக நேற்று நடந்த ஊடக சந்திப்பொன்றில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...