Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லும் அரசியல் வியாபாரிகள் கொட்டம் 22 ஆம் திகதி அடங்கி விடும்! -முசாரப் எம்.பி

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2024 • 11:30 AM

முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லும் அரசியல் வியாபாரிகள் கொட்டம் 22 ஆம் திகதி அடங்கி விடும்! -முசாரப் எம்.பி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இனவாதமில்லாத ஆளுமைமிக்க தலைமைத்துவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களாகும்.அவ்வாறான ஒரு தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது நாட்டு மக்களின் கடமையாகும்.
  • ராஜபக்க்ஷக்களை 2005ம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவர உழைத்தவர்கள் ஜே.வி்.பி.கட்சியினர்தான்.
  • அரசியல் அதிகாரம் இல்லாமல் எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இறக்காமத்திற்கு எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பேன்.
  • இறக்காமத்தின் அபிவிருத்திக்காக எனக்குக் கிடைத்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலும், விசேட நிதி ஒதுக்கீட்டிலும் சமார் 16 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிவிட்டுத்தான்.இந்த மேடையில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
எழுத்து அளவு:
இனவாதமில்லாத ஆளுமைமிக்க தலைமைத்துவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களாகும்.அவ்வாறான ஒரு தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வது நாட்டு மக்களின் கடமையாகும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் தெரிவித்தார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணிஎஸ்.எம்.எம்.முசாரப் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரஜா மற்றும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கலீலுர் றஹ்மான் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் .இறக்காமம் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி கருத்தினை முசாரப் எம்.பி தெரிவித்தார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முசாரப் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
இந்நாட்டில் அபாயகரமான ஒரு கட்சியாகவும், இயக்கமாகவும் ஜே.வி.பி கட்சி காணப்படுகின்றது.
 
 தனது கட்சி சின்னமான மணியை வெளியே கொண்டு வர தைரியம் இல்லாமல் மணி காட்டியாக ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கேதான் அவர்களது தோல்வி தொடங்கிவிட்டது. நாட்டின் பொருளாதார அழிவுக்கும் அந்தக் கட்சிதான் காரணமாகும்.
 
பல்கலைக்கழகம் தொடக்கம் அரச நிறுவனங்கள் வரை தொழிற்சங்கள் என்ற போர்வையில் அமைப்புகளை ஏற்படுத்தி போராட்டங்களைச் செய்து காலத்தை வீணடித்து பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் தடுக்கின்றனர்.
ராஜபக்ஸக்கள் திருடர்கள் என்று கத்துகின்றனர்.
 
 ராஜபக்க்ஷக்களை 2005ம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவர உழைத்தவர்கள் ஜே.வி்.பி.கட்சியினர்தான். மஹிந்த சிந்தனையை புகழ்ந்து பாராட்டி பேசியவர்கள் இன்று ராஜபக்ஸக்கள் கள்வர்கள் என்று கத்துவது வேடிக்கையாக உள்ளது.
 
எனவேதான் சர்வதேசம் அறிந்த, இனவாதமில்லாத, இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க நாம் எல்லோரும் தயாராக வேண்டும்.
 
அரசியல் அதிகாரம் இல்லாமல் எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இறக்காமத்திற்கு எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பேன். கடந்த காலத்தில் நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் எண்ணத்துடனயே இருந்து கொண்டிருக்கின்றேன்.
 
இறக்காமத்தின் அபிவிருத்திக்காக எனக்குக் கிடைத்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டிலும், விசேட நிதி ஒதுக்கீட்டிலும் சமார் 16 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிவிட்டுத்தான்.இந்த மேடையில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
 
நமது அரசியல் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அரசியல் கைக்கூலிகள் முசாரப் வாக்குறுதியை மீறிவிட்டதாக அபாண்டமான பொய்யைச் சொல்லுகின்றனர்.
 
பொத்துவில் பள்ளிவாசலில் நான் செய்த சத்தியத்தைக் காப்பாற்றவே நான் இருக்கின்றேன். இலங்கையில் உள்ள எந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகன பேர்மிட் இன்றுவரை வழங்கப்படவில்லை. அவ்வாறு கிடைக்கும்போது அதனை செய்யவே சித்தமாக உ்ளளேன்.
ஒரு அமைச்சினைக்கூட சரியாக செய்து முடிக்க துப்பில்லாத சஜித் பிரேமதாசவினால் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. 
 
இன்று இனவாத்தின் கூடாரமாக ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகின்றது. அந்த இனவாதக் கூடாரத்தில் ஹக்கீமும், ரிசாட்டும் இருப்பதை முஸ்லிம்கள் அங்கீகரிக்க முடியாது.
 
தமது அரசியல் வியபாரத்திற்காக முஸ்லிம்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர். எதிர்வரும் 22ஆம் திகதியுடன் முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லும் அரசியல் வியாபாரிகள் கொட்டம் அடங்கிப்போகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இப்பிரச்சாரக் கூட்டத்தில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலி,கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் ரனூஸ் இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மன்னாரைச் சேர்ந்த உலமாக்கலான முனாஜித், இர்சாத், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...