1200 x 80 DMirror

 
 

கட்டாரில் தொழில்புரிந்த நிலையில் 6500ற்கும் அதிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த 10 வருடங்களிற்குள் உயிரிழந்திருப்பதாக கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பல்வேறு விபத்துக்களில் பலியாகியிருக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிற்கான அனுசரணை நாடாக கட்டார் 10 வருடங்களாக அதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பணியாளர்களில் 12 பேர் ஒருவாரத்திற்கு உயிரிழந்துவந்த நிலையில், இதுவரை 6500 பேர்வரை பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் கடந்த 10 வருடங்களில் இலங்கையைச் சேர்ந்த 557 பேர் கட்டாரில் உயிரிழந்துள்ளனர். மேலும் பிலிப்பைன்ஸ், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி