Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

மூன்றாவது இடத்திலுள்ள ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அநுரகுமாரவை வலுப்படுத்தும் என்கிறார் ரிஷாத்!

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2024 • 1:42 PM

மூன்றாவது இடத்திலுள்ள ரணிலுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அநுரகுமாரவை வலுப்படுத்தும் என்கிறார் ரிஷாத்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விக்ரமசிங்கவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சார்பானதாகவே அமையும் என்றும் அநுர ஆட்சிக்கு வந்தால்,ய ஆறு மாதங்களில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (14) சனிக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது.
  • இவையிரண்டும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில்தான் சாத்தியம்.
  • பாரிய வீசா மோசடியில் 54,000 கோடி ரூபாவை அமைச்சர்கள் சுருட்டிக் கொண்டனர்.
எழுத்து அளவு:

விக்ரமசிங்கவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சார்பானதாகவே அமையும் என்றும் அநுர ஆட்சிக்கு வந்தால்,ய  ஆறு மாதங்களில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, நேற்று (14) சனிக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது,

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார். இத்தேர்தலில், ரணில் வெல்லப் போவதில்லை. சஜித் பிரேமதாசவின் வெற்றியே உறுதியாகிவிட்டது. எனவே, அநுரவுக்கு வாக்களிப்பதும் வீணானதே. ரணிலுக்கு வாக்களித்தால், அநுரவுக்கு வாய்ப்பாகிவிடும். மிகக் கவனமாக சஜித்துக்கு வாக்களியுங்கள்.

வீழ்ந்துபோயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ஊழலில்லாத அரசாங்கம் அவசியம். சமூகங்களிடையே நல்லுறவு நிலவ, இனவாதமில்லாத ஆட்சியாளர்கள் அவசியம். இவையிரண்டும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில்தான் சாத்தியம்.

ஊழல்வாதிகளையும் இனவாதிகளையும் பாதுகாக்கும் ரணிலால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ரணிலின் இரண்டு வருட ஆட்சியில் புற்றுநோய் மருந்து மோசடிகள் இடம்பெற்றன. பாரிய வீசா மோசடியில் 54,000 கோடி ரூபாவை அமைச்சர்கள் சுருட்டிக் கொண்டனர். இவற்றை ரணிலால் தடுக்க முடியவில்லை.

பிரதேச சபையைக் கூட ஆட்சி செய்த அனுபவமில்லாத அனுர ஆட்சிக்கு வந்தால், மீண்டும் வரிசை யுகமே ஏற்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள்.

சிறுபான்மைச் சமூகங்களின் ஏகதலைமைகள் எல்லாம் சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கின்றன. இவரது தந்தையாரான ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில், ஏழைகளுக்கு வாழ்வளிக்கப்பட்டது. சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனவே, அவரது புதல்வரை ஜனாதிபதியாக்கி, நிம்மதியான வாழ்வுக்கு வழி சமைப்போம்" என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...