Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

சஜித் ஜனாதிபதியான பின்னர் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முஸ்லிம் தலைமைகளான நாமே பொறுப்பு! - ரவூப் ஹக்கீம்

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2024 • 6:20 AM

சஜித் ஜனாதிபதியான பின்னர் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முஸ்லிம் தலைமைகளான நாமே பொறுப்பு! - ரவூப் ஹக்கீம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த மோசடி தொடர்பில் நானும் சக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தோம்.
  • அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகின்றது. நீதிமன்ற தீர்ப்புகளால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நீதிமன்றம் வெளியேற்றியுள்ளது.
  • முஸ்லிம் சமூகத்தின் அண்மைக்காலப் பிரச்சினைகளில் அவருடைய சிறப்பான நடத்தைகளைப் பார்த்தோம்.அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தைகளையும் பார்த்தோம்.
எழுத்து அளவு:

மோசடி தொடர்பில் இந்த அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும் சம்பந்தப்பட்டோருக்கும் எதிராக  உயர் நீதிமன்றத்தில் தாங்கள் தாக்கல் செய்த மனித உரிமை மீறல் வழக்கில் வாதாடி விட்டுத்தான் மூதூருக்கு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை(13) மூதூரில்  ஐக்கிய மக்கள் கூட்டணியின்  ஜனாதிபதி வேட்பாளரும் எதிக்ர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.   
 
அங்கு,தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் மேலும் கூறியதாவது,
   
இந்த அரசாங்கம் வீசா தொடர்பில் 2,400 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்டுள்ளது.இந்த மோசடி மத்திய வங்கி மோசடியையும் விட 100,150 வீதத்துக்கு மேற்பட்ட மோசடியாகும். இந்த மோசடி  தொடர்பில் நானும் சக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தோம்.
 
அந்த வழக்கில் சட்டத்துக்கு அமைவாக கேள்விப்பத்திரம் கோரப்படாமல் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு கொந்தராத்து வழங்கப்பட்டதென்றும் குறிப்பிட்டு ,அதில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தோம். 
 
இந்த வழக்கு இரண்டாவது தடவையாக இன்று(13)விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது ,முன்னர் மூன்று    நீதியரசர்களும் புதிய வீசா நடைமுறைக்கு  இடைக்கால தடையை பிறப்பித்திருந்த நிலையில் ,நீதிமன்ற உத்தரவை மீறி முந்திய வீசா முறைக்கு திரும்பாது நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திற்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
 
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்த பின்னர் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கும்  அதனுடைய எதிர்பார்ப்புகளுக்கும் அவருடன் இருக்கும்  முஸ்லிம் தலைமைகள் பொறுப்பேற்போம். 
 
ரணில் விக்கிரமசிங்கவுக்கு அளிக்கும் வாக்குகள் அறவே பயனற்றவை. 
 
சஜித் பிரேமதாசவின் நல்ல குணாம்சங்கள் பற்றி வெவ்வேறுவிதமாக ஒவ்வொருவரும்  விமர்சிப்பார்கள். முஸ்லிம் சமூகத்தின் அண்மைக்காலப் பிரச்சினைகளில் அவருடைய சிறப்பான நடத்தைகளைப் பார்த்தோம்.அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தைகளையும் பார்த்தோம்.
 
 பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் யுத்தம் செய்து காஸாவிலுள்ள குழந்தைகள்,பெண்கள், முதியவர்களை படுகொலை செய்து, அவர்களின் உடைமைகளையெல்லாம் அழிக்கின்றது.யுத்த நிலைமையில்   காஸா மக்கள்  இஸ்ரேல் பண்ணைகளுக்கு வேலைக்குப் போவதில்லை. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகின்றது. 
 
நீதிமன்ற தீர்ப்புகளால்  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நீதிமன்றம் வெளியேற்றியுள்ளது. அதில் இஸ்ரேலுக்கு இங்கிருந்து ஆட்களை அனுப்பிய மனுஷ நாணயக்காரவும் ஒருவர் . அவரை ஆதரித்து இஸ்ரேலிய  இளைஞர் மன்றம் என்ற பெயரில் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு  காலியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
 
 ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் எமன் நாட்டில் செங்கடலூடாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி  கப்பல்களை நிர்மூலமாக்கிய போது இந்த ரணில் விக்கிரமசிங்க இலங்கை கடற்படையை அங்கு அனுபபுகிறார் என்றால் இதைவிட வேறு என்ன வெட்கக்கேடு என்றார்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...