Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

சிலர் பணத்துக்காக விலைபோனதால், முசலி சமூகத்தின் கௌரவத்தை மலினப்படுத்திவிட்டனர்! - ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2024 • 12:39 PM

சிலர் பணத்துக்காக விலைபோனதால், முசலி சமூகத்தின் கௌரவத்தை மலினப்படுத்திவிட்டனர்! - ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மேலும் கூறியதாவது; "தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
  • எனவே, இம்மாதம் 22இல் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்துக்கு அத்திவாரமிட்ட பெருமை, இந்தப் பிரதேசத்து தாய்மார்களுக்கே கிடைக்கும்.
  • தான் ஆட்சிக்கு வந்தால் ஏழைத் தாய்மார்களுக்கு மாதாந்தம் இருபதாயிரம் ரூபாவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
எழுத்து அளவு:

அடையாளமாக முசலி பிரதேச சபை கருதப்படுமென மன்னார், அளக்கட்டு பகுதியில் நடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

வியாழக்கிழமை (12) மன்னார், அளக்கட்டு - பொற்கேணியில், பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மேலும் கூறியதாவது;
 
"தாய்மார்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நாட்டு அரசியலில் நவீன மாற்றம் ஏற்படப்போகிறது. இந்த மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேச சபை கருதப்படும். அந்தளவுக்கு இப்பிரதேச தாய்மார்கள் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கின்றனர். எனவே, இம்மாதம் 22இல் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்துக்கு அத்திவாரமிட்ட பெருமை, இந்தப் பிரதேசத்து தாய்மார்களுக்கே கிடைக்கும்.
 
IMG 20240914 180411 800 x 533 pixel
 
ஏழைத் தாய்மார்களின் பசியை உணர்ந்தவர் சஜித் பிரேமதாச. இவரது தந்தைதான் வறுமையை ஒழிப்பதற்கு "ஜனசவிய" திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர். தான் ஆட்சிக்கு வந்தால் ஏழைத் தாய்மார்களுக்கு மாதாந்தம் இருபதாயிரம் ரூபாவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இதுபோன்ற நல்ல நிகழ்ச்சித் திட்டங்கள் சஜித் பிரேமதாசவிடம் உள்ளன.
 
இப்போது சிலர், எங்களிலிருந்து பிரிந்து ரணிலை ஆதரிக்கச் சென்றுவிட்டனர். முன்னாள் உறுப்பினர்கள் என்ற கௌரவம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது. எமது தாய்மார்கள் வழங்கிய வாக்குகளால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சென்றதாலே, இந்த கௌரவங்கள் இவர்களுக்கு கிடைத்தன. பணத்துக்காக விலைபோனதால், முசலி சமூகத்தின் கௌரவத்தை மலினப்படுத்திவிட்டனர்.
 
ஆகையால், விலை போவோர்களுடன் நாங்கள் இல்லை என்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும். எனவே டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து, சஜித் பிரேமதாசவின் வெற்றியில் பங்காளர்களாவோம்" என்றார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...