Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

சமுர்த்தி கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம்! - சஜித் பிரேமதாச

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2024 • 12:19 PM

சமுர்த்தி கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம்! - சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் அடித்தளம் இடுவோம்.
  • ஜனசவிய, அஸ்வெசும, கெமிதிரிய, சமூர்த்தி போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வறுமையை 24 மாதங்களுக்குள் ஒழிப்பதற்காக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்குவோம்.
  • அரசாங்கம் 43 பில்லியன் ரூபா கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
  • கொழும்பில் இன்று(13) நடைபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் அடித்தளம் இடுவோம். ஜனசவிய, அஸ்வெசும, கெமிதிரிய, சமூர்த்தி போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வறுமையை 24 மாதங்களுக்குள் ஒழிப்பதற்காக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்குவோம்.

இதற்கு மேலதிகமாக நிதி வழங்கி புதிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். இந்த சந்தர்ப்பத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கும் சேவையை கௌரவமாக கருதுவோம். இந்த திட்டத்தை பலமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
இந்த சமூர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக கொவிட் காலத்தில் அரசாங்கத்திற்கு கடன் பெறவும் முடியுமாக இருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடனை செலுத்துவும் இல்லை. கடனுக்கான வட்டியைச் செலுத்துவும் இல்லை. அரசாங்கம் 43 பில்லியன் ரூபா கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
கொழும்பில் இன்று(13) நடைபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
சமூர்த்தி வேலைத்திட்டத்தை எவரேனும் வீழ்த்துவதற்கு முயற்சி செய்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு குறைபாடுகள் காணப்படுகின்றன. அவர்களின் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வினை பெற்றுக் கொடுத்திருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
பதவி உயர்வு குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம். சமூர்த்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டவர்களுக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
 
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தியின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் பணம் வழங்கும் வேலைத்திட்டம் அல்ல. இதன் ஊடாக வரியவர்களை வறுமையிலிருந்து மீட்கின்ற வேலைத்திட்டமாகும். அதற்காக சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...