Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு வன்முறைகள் பதிவு! - ரவி செனவிரத்ன

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2024 • 11:41 AM

தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு வன்முறைகள் பதிவு! - ரவி செனவிரத்ன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே எதிர்பார்க்கிறார்கள் என இளைப்பாறிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
  • அரசியல் இயக்கமென்ற வகையில் நாங்களும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல் இயக்கத்திற்காக முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
எழுத்து அளவு:

நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே எதிர்பார்க்கிறார்கள் என

இளைப்பாறிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனெவிரத்ன தெரிவித்தார்
 
தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
 
கடந்த 30 ஆம் திகதிவரை எமக்கு பதிவாகிய தோ்தல் வன்செயல்கள் மற்றும் சட்டமீறல்கள் சம்பந்தமாக பொலிஸ் தலைமையகத்தின் தோ்தல் தொழிற்பாடுகள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருக்கிறோம். 
 
அந்த முறைப்பாடுகள் பற்றி ஆக்கமுறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். 
 
மக்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தலையே. அரசியல் இயக்கமென்ற வகையில் நாங்களும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தோ்தல் இயக்கத்திற்காக முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
 
 எனினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் தேசிய மக்கள் சக்தியை இலக்காகக் கொண்டு வன்முறை செயல்கள் புரியப்படுவது பதிவாகியுள்ளது.
 
 கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒரு வீட்டுக்குச் சென்று இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்கள். ராஜகிரியவிலும் மருதானையிலும் இரண்டு அச்சகங்களில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை இலக்காகக் கொண்டு சேறுபூசும் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு வருவதா பதிவாகியது. அது சம்பந்தமாக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். 
 
தேசிய மக்கள் சக்தியை சோ்ந்தவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தோ்தல்கள் செயலகத்துக்கும் பொலிஸுக்கும் வழங்கப்படுகிறது. 
 
சுதந்திரமான, நீதியான மற்றும் அமைதியான தோ்தலை நடத்துவதே எம்மனைவரின் எதிர்பார்ப்பாகும். தோ்தல்கள் ஆணைக்குழு அந்த எதிர்பார்ப்பினை ஈடேற்றுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...