Tamil Leader News
முக்கியம்
DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●
செய்திகள்

கிழக்கிலிருந்து அரசியல் தலைவர்களை உருவாக்க மக்கள் திரள வேண்டும்! - நாமல் ராஜபக்‌ஷ

T

The Leader Desk

செப்டம்பர் 11, 2024 • 4:51 AM

கிழக்கிலிருந்து அரசியல் தலைவர்களை உருவாக்க மக்கள் திரள வேண்டும்! - நாமல் ராஜபக்‌ஷ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இளைஞர்களுக்கு சிறந்த நாளை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
  • மட்டக்களப்பில் நேற்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அதிவேக நெடுஞ்சாலையை மட்டக்களப்புக்கு கொண்டுவரும் திட்டம் எமக்கு இருந்தது . நல்லாட்சி அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தியது.
எழுத்து அளவு:

இளைஞர்களுக்கு சிறந்த நாளை உருவாக்க முடியும் என நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்க்ஷ..

''ஒவ்வொரு அரசியல்வாதியும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கும் அரசியல் வாக்குறுதிகளை என்னால் வழங்க முடியாது. மாறாக இந்நாட்டு தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு சிறந்த நாளை என்னால் உருவாக்க முடியும்; அதற்கான தேவை நமக்கு இருக்கிறது. தேர்தல் நேரத்தில், நாடுகளுக்கு இடையே பிளவுகள் அதிகரிக்கும்.

சில அரசியல்வாதிகள் இனம், மதம், கட்சிகள் என பிரிவினைகளை ஏற்படுத்தி அரசியல் செய்கிறார்கள் ஆனால் நான் பிரிவினை அரசியல் செய்யும் அரசியல்வாதி அல்ல. இன்று கொழும்பில் இருந்து கிழக்குக்கு கொண்டு வரப்படும் அரசியல்வாதிகளை விடுத்து தமது மாகாணத்தில் இருந்து அரசியல் தலைவர்களை உருவாக்க மக்கள் திரள வேண்டும். அதற்கு நான் உதவுவேன்.

அதிவேக நெடுஞ்சாலையை மட்டக்களப்புக்கு கொண்டுவரும் திட்டம் எமக்கு இருந்தது . நல்லாட்சி அரசாங்கம் அதனை தடுத்து நிறுத்தியது. நாம் அமைக்கும் அரசாங்கத்தில் மட்டக்களப்பு வரை மத்தள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும். குறிப்பாக, மட்டக்களப்பு, அறுகம்பே, திருகோணமலை முதல் பாசிக்குடா வரையிலான சுற்றுலாத் துறையை மத்தள விமான நிலையத்துடன் இணைப்பதன் மூலம் அபிவிருத்தி செய்யப்படும்.

தமிழ் கலாசாரத்தை காக்க வேண்டும். நான் இஸ்லாமிய கலாசாரத்தை பாதுகாக்க விரும்புகிறேன். பௌத்த கலாசாரத்தால் உருவாக்கப்பட்ட நாடு என்ற வகையில் ஏனைய கலாசாரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

நாங்கள் கடினமான காலத்தை கடந்து வந்துள்ளோம். அன்று இனங்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது. தேர்தலின் போது அந்த பிரிவினை அதிகப்படுத்துகிறது என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...