Tamil Leader News
முக்கியம்
DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●
செய்திகள்

சஜித்தின் வெற்றிக்காக ஒன்றுபடும் சமூகங்களைக் குலைக்க கோட்டாவின் கையாட்கள் களமிறக்கம்! -ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2024 • 4:49 AM

சஜித்தின் வெற்றிக்காக ஒன்றுபடும் சமூகங்களைக் குலைக்க கோட்டாவின் கையாட்கள் களமிறக்கம்! -ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்பான ஆட்சியைக் கொண்டுவருவதற்காக நாம் ஒன்றுபட்டுள்ளபோது, கோட்டாவின் கூலிப்படைகள் நமது மக்களை கூறுபோடுவதற்கு களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஜனாஸாக்களை எரிக்கின்றபோது, பேசாமடந்தைகளாக இருந்த கோட்டாவின் கையாட்களே ரணிலின் அமைச்சரவையில் உள்ளனர்.
  • ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, தோப்பூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, *நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நால்வருக்கே போட்டி.
எழுத்து அளவு:

பாதுகாப்பான ஆட்சியைக் கொண்டுவருவதற்காக நாம் ஒன்றுபட்டுள்ளபோது, கோட்டாவின் கூலிப்படைகள் நமது மக்களை கூறுபோடுவதற்கு களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, தோப்பூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது,
 
*நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நால்வருக்கே போட்டி. இதில், ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார். முதலாமிடத்திலுள்ள சஜித்தை முந்திச் செல்வதற்கு அனுர முயற்சிக்கிறார். இதை நாம் அனுமதிக்க இயலாது. கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்பினை பெறுவது அவசியம்.
 
ஜனாஸாக்களை எரிக்கின்றபோது, பேசாமடந்தைகளாக இருந்த கோட்டாவின் கையாட்களே ரணிலின் அமைச்சரவையில் உள்ளனர். இதனால்தான், ரணிலை எதிர்க்கிறோம்.
 
இம்மாவட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் இவை பற்றிச் சொல்லியுள்ளோம். செல்வநகரில் தண்ணீருக்கு பிரச்சினைகள் உள்ளன. தோப்பூர், குச்சவெளி உள்ளிட்ட திருகோணமலை மாவட்டக் கிராமங்களின் பிரச்சினைகள், சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் தீர்க்கப்படும். 
 
ஆகையால், எதிர்வரும், சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தேடுங்கள். எமது நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக, அனைவரும் ஒன்றுபட்டு சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சஜித்தின் வெற்றிக்காக ஒன்றுபடும் சமூகங்களைக் குலைக்க கோட்டாவின் கையாட்கள் களமிறக்கம்! -ரிஷாத் பதியுதீன் | Tamil Leader | We Lead the Nation