Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

மைதானத்திலேயே இல்லாத ஒருவரை வீரனாகப் பார்ப்பது எப்படி? ரணிலை களமாடும் ரிஷாத் பதியுதீன்!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2024 • 3:53 PM

மைதானத்திலேயே இல்லாத ஒருவரை வீரனாகப் பார்ப்பது எப்படி? ரணிலை களமாடும் ரிஷாத் பதியுதீன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, சனிக்கிழமை (07) திருகோணமலை, புல்மோட்டையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • புனித குர்ஆன்களை ஒளித்து வைக்கும் நிலையும் எமக்கு ஏற்பட்டது.
எழுத்து அளவு:

ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, சனிக்கிழமை (07) திருகோணமலை, புல்மோட்டையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

"வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தலை நாடு எதிர்கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம், சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் என்பவை இந்தத் தேர்தலின் முடிவிலேயே தங்கியுள்ளது. எனவே, மிகக் கவனமாகச் சிந்தித்து தீர்மானமெடுக்க வேண்டிய தருணத்துக்கு நாம் வந்துள்ளோம். ஆசை வார்த்தைகள் மற்றும் அவசரப்புத்திகளுக்கு அடிமைப்படாமல் எம்மைச் சுதாகரித்துக் கொள்வதும் அவசியம்.

இளைஞர்களுக்கு இவ்விடயத்தில் அதிக நிதானம் அவசியம். ஒருசில இளைஞர்களின் தடுமாற்றப்புத்தியாலும் இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாலுமே, ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. சகல முஸ்லிம்களையும் சந்தேகக் கண்கொண்டும் அடிப்படைவாத சந்தேகத்துடனும் பிறர் எம்மைப் பார்க்கும் அபாயச் சூழல், இத்தாக்குதலின் பின்னரேயே ஏற்பட்டது. பள்ளிவாசல்களுக்குள்ளும் எமது வீடுகளுக்குள்ளும் மோப்ப நாய்களைக் கொண்டுவந்து தேடுதல் நடத்தப்பட்டது. அரபு மத்ரஸாக்கள் ஆயுதப் பயிற்சிக் கூடங்களாக சந்தேகிக்கப்பட்டன. புனித குர்ஆன்களை ஒளித்து வைக்கும் நிலையும் எமக்கு ஏற்பட்டது. அநியாயமாக நாம் கைதிகளாக்கப்பட்டோம். ஏன்? ஒரு சில இளைஞர்கள் சலன புத்திக்குப் பலியானதாலே!

சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திலோ அல்லது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்திலோ எமது இளைஞர்கள் பங்கேற்றதில்லை. தேசப்பற்றுடன் நடந்துகொள்வதால், நமது நம்பிக்கை மற்றோரிடத்தில் பெறுமதியாகவே உள்ளது. இதைக் குலைப்பதற்கு இளைஞர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது.

எத்தனை பேர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டாலும் இருவரே களத்தில் ஓடுகின்றனர். ரணில் விக்ரமசிங்க ஆடுகளத்தில் கூட இல்லை. தேசியப்பட்டியலில் எம்.பியாக வரமுயற்சிக்கும் அமைச்சர் அலிசப்ரி போன்றோரே, ரணிலை ஆதரிக்குமாறு ஆசை வார்த்தைகள் பேசுகின்றனர். மைதானத்திலேயே இல்லாத ஒருவரை வீரனாகப் பார்ப்பது எப்படி? வெற்றிக் கம்பத்தை எட்டும் தூரத்தை அண்மிக்கிறார் சஜித் பிரேமதாச. இந்த ஓட்டத்தில் அனுரகுமார தோற்பதே நிச்சயம்" என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மைதானத்திலேயே இல்லாத ஒருவரை வீரனாகப் பார்ப்பது எப்படி? ரணிலை களமாடும் ரிஷாத் பதியுதீன்! | Tamil Leader | We Lead the Nation