Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட கூட்டத்தில் தோட்டாவுடன் ஒருவர் கைது!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2024 • 12:11 PM

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட கூட்டத்தில்  தோட்டாவுடன் ஒருவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொதுக்கூட்டத்துக்கு வந்த ஒருவரிடமிருந்து தோட்டா ஒன்றை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
  • மூன்று வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட உயிருள்ள தோட்டாவை தனது பணப்பையில் வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொதுக்கூட்டத்துக்கு வந்த ஒருவரிடமிருந்து தோட்டா ஒன்றை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 

மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த நபர் சந்திவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 
 
ரணில் விக்கிரமசிங்க பொது பேரணிக்கு வருவதற்கு சற்று முன்னர் நடத்தப்பட்ட தேடுதலில், சந்தேக நபரின் பணப்பையில் உயிருள்ள தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதுடன், வாகரையை சேர்ந்த 24 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மூன்று வருடங்களுக்கு முன்னர் வீதியொன்றில் கண்டெடுக்கப்பட்ட உயிருள்ள தோட்டாவை தனது பணப்பையில் வைத்திருந்ததாக சந்தேக நபர் தெரிவித்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...