Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

யானையின் தாக்குதலில் ஒருவர் பலி: கல்முனை பகுதியில் சம்பவம்!

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2024 • 9:13 AM

யானையின் தாக்குதலில் ஒருவர் பலி:  கல்முனை பகுதியில் சம்பவம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பலியான சம்பவம் கல்முனை பகுதியில் இடம்பெற்றது.
  • அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ் தரிப்பிடத்துக்கு பின் பக்கமாக அமைந்துள்ள குளக்கட்டில் இன்று (7) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
  • கல்முனை தலைமையக பொலிஸார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தெக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
  • மேலும் யானைத்தாக்குதலுக்கு உள்ளானவர் பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்தை முகவரியாக கொண்ட செல்லையா வேலாயுதம் என்ற 68 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என்பதுடன் 03 பிள்ளைகளின் தந்தையுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்து அளவு:
பலியான சம்பவம்  கல்முனை பகுதியில் இடம்பெற்றது.
 
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட  இலங்கை போக்குவரத்து சபை பஸ் தரிப்பிடத்துக்கு பின் பக்கமாக அமைந்துள்ள குளக்கட்டில் இன்று (7) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
குறித்த யாசகர் பஸ் தரிப்பிடத்தில் வழமை போன்று தங்கி இருந்து யாசகம் பெறுபவர் எனவும் காலைக் கடனை கழிப்பதற்கு குளக்கட்டினை நோக்கி சென்றிருந்த நிலையில் இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.
 
கல்முனை தலைமையக பொலிஸார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்தெக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
மேலும் யானைத்தாக்குதலுக்கு உள்ளானவர் பெரிய நீலாவணை தொடர்மாடி வீட்டுத் திட்டத்தை  முகவரியாக கொண்ட செல்லையா வேலாயுதம் என்ற   68 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என்பதுடன் 03 பிள்ளைகளின் தந்தையுமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
அத்துடன் குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் தனியன் யானை உட்பட பல யானைகள் தாக்குதல் இடம்பெற்ற  பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டு மேய்ச்சலில் ஈடுபட்டுள்ளன.
 
மேலும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீலின் உத்தரவில் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர்  விசாரணையின் பின்  உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த காலங்களில்  அம்பாறை மாவட்டத்தில்   யானை தாக்குதலுக்கு இலக்காகி  பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யானையின் தாக்குதலில் ஒருவர் பலி: கல்முனை பகுதியில் சம்பவம்! | Tamil Leader | We Lead the Nation