Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினால் துப்பாக்கிப் பிரயோகம்!

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2024 • 7:45 AM

வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தினால் துப்பாக்கிப் பிரயோகம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்படுத்துபவர்கள் மீதும் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இதற்காக விசேட புலனாய்வுக் குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
  • நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் சட்டவிரோத துப்பாக்கிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் மதிப்பிட்டுள்ளனர்.
  • ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது இலட்சம்.
எழுத்து அளவு:

ஏற்படுத்துபவர்கள் மீதும் வாக்குப்பதிவுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கும் கும்பலைக் கட்டுப்படுத்துவதற்கும்  பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
 
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதற்காக விசேட புலனாய்வுக் குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் சட்டவிரோத துப்பாக்கிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் மதிப்பிட்டுள்ளனர்.
 
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது இலட்சம்.
 
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க சுமார் பத்து இலட்சம் வாக்காளர்கள் இணைந்துள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...