Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

தனக்கு ஆதரவளிக்காத அமைச்சர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார் ஜனாதிபதி!

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2024 • 6:30 AM

தனக்கு ஆதரவளிக்காத அமைச்சர்களை வெளியேறுமாறு  உத்தரவிட்டார் ஜனாதிபதி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காத அரசாங்கக் கட்சியைப் பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை வெளியேறுமாறு ஜனாதிபதி அறிவித்தல் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • எனவே முக்கியமான தருணத்தில் ஆதரவளிக்காதவர்களை நீக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இந்தக் கோரிக்கையை பரிசீலித்த ஜனாதிபதி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

ரணில் விக்கிரமசிங்கவுக்கு  ஆதரவளிக்காத அரசாங்கக் கட்சியைப் பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை

வெளியேறுமாறு ஜனாதிபதி அறிவித்தல் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிக்கு ஆதரவான அமைச்சர்கள் உள்ளிட்ட பல கட்சி அமைப்புகளின் கோரிக்கையை கருத்திற் கொண்டே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இவ்வாறான இக்கட்டான தருணத்தில் பெயருக்கு மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் வைத்திருப்பதில் பயனில்லை என ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கட்சியின் தீர்மானங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக விசுவாசிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே முக்கியமான தருணத்தில் ஆதரவளிக்காதவர்களை நீக்கி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் செயற்பாடுகளை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த ஜனாதிபதி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வேறு சில இரஜாங்க அமைச்சர்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எம்.பி.க்கள் குழுவை எச்சரித்துள்ளதாகவும்  தெரிய வந்துள்ளது.

இதேவேளை, பல இராஜாங்க அமைச்சர்கள் தங்களை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக இராஜினாமா செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தனக்கு ஆதரவளிக்காத அமைச்சர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார் ஜனாதிபதி! | Tamil Leader | We Lead the Nation