Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

ரவூப் ஹக்கீமிடமும் ரிஷாத் பதியுதீனிடமும் உலமா கட்சி விடுத்துள்ள வேண்டுகோள்!

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2024 • 9:13 AM

ரவூப் ஹக்கீமிடமும் ரிஷாத் பதியுதீனிடமும் உலமா கட்சி விடுத்துள்ள வேண்டுகோள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்திருப்ப‌தாவ‌து, 13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்துவ‌து என்ப‌து வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை ம‌ட்டும‌ல்ல‌ கொழும்பு முஸ்லிம்க‌ளையும் பேரின‌வாத‌ங்க‌ளுக்கு அடிமையாக்கும் செய‌லாகும்.
  • ன் ப‌டி காணி, ம‌ற்றும் பொலிஸ் அதிகார‌ம் மாகாண‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டால் 1987 முத‌ல் 90 வ‌ரை முஸ்லிம்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌லாறே மீண்டும் வ‌ரும்.
  • புலிக‌ள் கால‌த்தில் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் இன்று வ‌ரை மீள‌ கைய‌ளிக்க‌ப்ப‌ட‌வில்லை.
  • ஆக‌வே 13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்துவ‌தாக‌ த‌மிழ் கூட்ட‌மைப்பிட‌ம் ச‌ஜித் பிரேம‌தாச‌ வாக்குறுதி அளித்துள்ள‌தாக‌ ம‌னோ க‌ணேச‌ன் சொல்வ‌து உண்மையா என்ப‌து ப‌ற்றிய‌ தெளிவை ஹ‌க்கீமும் ரிசாதும் சொல்ல‌ வேண்டும்.
எழுத்து அளவு:

திருத்தத்தை முழுமையாக நடைமு றைப்படுத்துவதாகவே சஜித் பிரேமதாஸ வாக்குறுதியளித்துள்ளார் என‌ சிறிதரனின் கேள்விக்கு  மனோ கணேசன் பதிலளித்துள்ள‌த‌ற்கு ச‌ஜித்துட‌ன் உள்ள‌ ர‌வூப் ஹ‌க்கீம், ரிசாத் ப‌தியுதீன் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு தெளிவான‌ ப‌தில் சொல்ல‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.

 
இது தொடர்பில் ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்திருப்ப‌தாவ‌து,
 
13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்துவ‌து என்ப‌து வ‌ட‌க்கு கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை ம‌ட்டும‌ல்ல‌ கொழும்பு முஸ்லிம்க‌ளையும் பேரின‌வாத‌ங்க‌ளுக்கு அடிமையாக்கும் செய‌லாகும்.
 
13ன் ப‌டி காணி, ம‌ற்றும் பொலிஸ் அதிகார‌ம் மாகாண‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டால் 1987 முத‌ல் 90 வ‌ரை முஸ்லிம்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ வ‌ர‌லாறே மீண்டும் வ‌ரும்.
 
காணி அதிகார‌ம் மாகாண‌ ச‌பைக்கு இல்லாத‌ இன்றைய‌ சூழ‌லிலும் கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளின் ப‌ல‌ காணிக‌ள் அர‌ச‌ அதிகாரிக‌ளினால் ப‌றிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.
 
புலிக‌ள் கால‌த்தில் கைப்ப‌ற்ற‌ப்ப‌ட்ட‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் இன்று வ‌ரை மீள‌ கைய‌ளிக்க‌ப்ப‌ட‌வில்லை.
 
அதே போல் கிழ‌க்கு மாகாண‌ ச‌பைக்கு பொலிஸ் அதிகார‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டால் அந்த‌ப்பொலிசாருக்கு ப‌சித்தால் முஸ்லிம்க‌ளையே சாப்பிடுவ‌ர்.
 
இதை நாம் க‌ற்ப‌னையாக‌ கூற‌வில்லை. இவ்வாறு 1989ல் கிழ‌க்கு மாகாண‌ ச‌பைக்கு பொலிஸார் த‌மிழ் தேசிய‌ ராணுவ‌ம் என்ற‌ பெய‌ரில்  உருவாக்க‌ப்ப‌ட்ட‌ போது காரைதீவு ச‌ந்தியில் வைத்து ச‌க‌ த‌மிழ் தேசிய‌ ராணுவ‌த்தால்  கிழ‌க்கு மாகாண‌ ச‌பையால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ பொலிசாரில் த‌மிழ் பொலிசாரை பிரித்து விட்டு நாற்ப‌து முஸ்லிம் பொலிசாரை சுட்டுக்கொன்ற‌து நினைவில்லையா? 
 
இத‌ன் போது உயிர் த‌ப்பிய‌ ஒரேயொரு பொலிஸ் உத்தியோக‌த்த‌ர் இப்போது சாய்ந்த‌ம‌ருது பொலிசில் க‌ட‌மையாற்றுகிறார்.
 
ஆக‌வே 13ஐ முழுமையாக‌ அமுல்ப‌டுத்துவ‌தாக‌ த‌மிழ் கூட்ட‌மைப்பிட‌ம் ச‌ஜித் பிரேம‌தாச‌ வாக்குறுதி அளித்துள்ள‌தாக‌ ம‌னோ க‌ணேச‌ன் சொல்வ‌து உண்மையா என்ப‌து ப‌ற்றிய‌ தெளிவை ஹ‌க்கீமும் ரிசாதும் சொல்ல‌ வேண்டும்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...