Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

ஜே.வி.பிக்கு மரிக்கார் விடுக்கும் சவால்!

T

The Leader Desk

செப்டம்பர் 6, 2024 • 5:56 AM

 ஜே.வி.பிக்கு மரிக்கார் விடுக்கும் சவால்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரணில்-அநுர நட்புறவு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.
  • கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • அநுரா வெற்றி பெறுவார் என்று போட்டியாளர்கள் பல்வேறு கூட்டுச் செய்திகளை உருவாக்கி வருவதற்கு நான் முற்றிலும் எதிரானவன்.
எழுத்து அளவு:

ரணில்-அநுர நட்புறவு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கூறுகிறார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'ரணிலுவும் அநுரவும் இன்று ஒரே கதையைச் சொல்கிறார்கள். ரணிலின் கருத்தையே அநுர கூறுகிறார். ரணிலின் வேலைத்திட்டத்தை அநுர முன்னோக்கி கொண்டு செல்வார் என்பது இந்த இடத்தில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

மஹியங்கனையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து அவர் நிச்சயமாக தோற்கடிக்கப்படுவார் என்பதை உணர்த்துகிறது. அதேபோன்று சஜித்தை தோற்கடிக்க ஜனாதிபதி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய தயார் என்பதும் நிரூபணமாகி வருகிறது.

அநுரா வெற்றி பெறுவார் என்று போட்டியாளர்கள் பல்வேறு கூட்டுச் செய்திகளை உருவாக்கி வருவதற்கு நான் முற்றிலும் எதிரானவன். இரகசிய கொடுக்கல் வாங்கல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி மக்களின் உரிமைகளுக்காக நான் நின்றதால் வீண் அவதூறு பிரசாரங்களை ரணில் அனுரவின் சங்கம் முன்னெடுத்துள்ளது.

ஆனால் என் கைகள் அழுக்காகவில்லை. என் கைகள் சுத்தமாக இருக்கின்றன. ரணிலும் அநுரவும் எமது வெற்றியின் மீது வெறி கொண்டுதான் இவற்றையெல்லாம் செய்கிறார்கள்.

அநுர, விஜித, கலப்பதி, நளிந்த அனைவரும் கார் பெர்மிட் பெற்றிருக்கிறார்கள் என நான் சவால் விடுகிறேன்..? இல்லை என்று கூறுங்கள். 

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து எந்த வித சலுகையும் பெறவில்லை. எவ்வாறாயினும் ரணில் அரசாங்கம் வழங்கிய வாகனங்களை எடுத்துச் சென்றதா இல்லையா என்பதை ஜேவிபி உறுப்பினர்கள் தயக்கமின்றி அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...