Tamil Leader News
முக்கியம்
நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●'கொபெய்கனே அழகி படுகொலை'யின் உண்மை; நவ. 12இல் ‘BLOOD LACED TEARS’ஆக வெளியீடு!●புதிய பாதுகாப்புச் சட்டமூலங்களால் GSP+ சலுகை ஆபத்தில்?●
செய்திகள்

போலி வைத்தியர்கள் மீது பாய்ந்தது பொலிஸாரின் கவனம்!

T

The Leader Desk

மே 4, 2024 • 3:59 PM

போலி வைத்தியர்கள் மீது பாய்ந்தது பொலிஸாரின் கவனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மருத்துவ நிலையங்களை நடத்தி வருவது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் இடையிலான கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (03) இடம்பெற்றது.
  • சங்கத்தின் தலைவர் கலாநிதி தர்ஷன சிறிசேன உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவும் பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டனர்.
எழுத்து அளவு:

மருத்துவ நிலையங்களை  நடத்தி வருவது தொடர்பில் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் இடையிலான கலந்துரையாடல் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (03)  இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் கலாநிதி தர்ஷன சிறிசேன உள்ளிட்ட உறுப்பினர்கள் குழுவும் பொலிஸாரை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டனர்.

மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இலச்சினை ஸ்டிக்கரை முறைகேடாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் போலி சான்றிதழ்களைப் பெற்று வைத்தியர்கள் போல் காட்சியளிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. .

மேலும், தரமற்ற மருந்துகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்தல், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் உட்பட பல விசாரணைகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் வீதிகளில் அன்றாடம் இடம்பெறும் வாகன விபத்துக்களை குறைத்தல். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உட்பட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

போலி வைத்தியர்கள் மீது பாய்ந்தது பொலிஸாரின் கவனம்! | Tamil Leader | We Lead the Nation