Tamil Leader News
முக்கியம்
ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●வங்காள விரிகுடாவின் கடல்சார் நெருக்கடிக்கு பிராந்திய ரீதியிலான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள்!●2027 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நுழைவுச்சீட்டுகள்: 8.4 மில்லியன் தேவை - 34,000 மாத்திரமே கொள்ளளவு!●ஹூதி தாக்குதல்களால் 11 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி!●உலக சந்தையில் எண்ணெய் விலைச் சரிவு: கொழும்பு பங்குச் சந்தை தலைகீழாக மாறியது!●தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டித் தகவல்களை மறைக்க முடியுமா?●190 பில்லியன் ரூபா இறக்குமதி மோசடி: வங்கி அதிகாரிகளின் தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை!●இலங்கையில் 4 இலட்சம் TikTok காணொளிகள் நீக்கம்: டிஜிட்டல் நெருக்கடியின் எச்சரிக்கை!●'தமிழர்களின் பிரச்சினைகளை மோடியிடம் கூறுவேன்': சீதாராமன்  உறுதியளிப்பு!●
செய்திகள்

சீரற்ற வானிலை - பல பிரதேசங்களில் பனி மூட்டம்

T

The Leader Desk

மே 9, 2023 • 4:19 AM

சீரற்ற வானிலை - பல பிரதேசங்களில் பனி மூட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதேவேளை தொடர்ச்சியாக மாலையில் மழை பெய்து வருவதனால் பல பிரதேசங்களில் மண் சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதனால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
  • இதேநேரம் கடந்த பல மாதங்களாக வறட்சியான காலநிலை காணப்பட்டதனால் காசல்ரி, மௌசாக்கலை, கெனியோன் லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளன.
எழுத்து அளவு:

வருகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் மழையுடன் அடிக்கடி ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல, கினித்தேனை, கடவல, வட்டவளை - ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, ரதலல், நானுஓயா உள்ளிட்ட பகுதியில் அடிக்கடி கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மழை மற்றும் பனி காணப்படும் பகுதிகளில் வாகனங்கள் செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தொடர்ச்சியாக மாலையில் மழை பெய்து வருவதனால் பல பிரதேசங்களில் மண் சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கடந்த பல மாதங்களாக வறட்சியான காலநிலை காணப்பட்டதனால் காசல்ரி, மௌசாக்கலை, கெனியோன் லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளன.

இந்நிலையில் தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதனால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

  • மலையக நிருபர் சுந்தரலிங்கம்-
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...