Tamil Leader News
முக்கியம்
ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●வங்காள விரிகுடாவின் கடல்சார் நெருக்கடிக்கு பிராந்திய ரீதியிலான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள்!●2027 இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் நுழைவுச்சீட்டுகள்: 8.4 மில்லியன் தேவை - 34,000 மாத்திரமே கொள்ளளவு!●ஹூதி தாக்குதல்களால் 11 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி!●உலக சந்தையில் எண்ணெய் விலைச் சரிவு: கொழும்பு பங்குச் சந்தை தலைகீழாக மாறியது!●தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டித் தகவல்களை மறைக்க முடியுமா?●190 பில்லியன் ரூபா இறக்குமதி மோசடி: வங்கி அதிகாரிகளின் தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை!●இலங்கையில் 4 இலட்சம் TikTok காணொளிகள் நீக்கம்: டிஜிட்டல் நெருக்கடியின் எச்சரிக்கை!●'தமிழர்களின் பிரச்சினைகளை மோடியிடம் கூறுவேன்': சீதாராமன்  உறுதியளிப்பு!●
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்

T

The Leader Desk

மே 6, 2023 • 10:55 AM

கதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையை ஆரம்பித்தனர் .
  • கடந்த 23 வருடங்களாக சைவ மரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாத யாத்திரை கதிர்காமக் கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.
  • யூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று யூலை 4ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
  • எது எவ்வாறிருப்பினும் உற்சவம் தொடர்பான இறுதி முடிவுகள் காட்டுப்பாதை திறப்பு உற்சவ காலம் பெரஹரா தொடர்பிலான இறுதிக்கட்ட தீர்மானங்கள் மொனராகல மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:



இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாத யாத்திரையை ஆரம்பித்தனர் .

கடந்த வருடத்தினை போன்று இவ்வருடமும் ஜெயா வேல்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர்.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மொனராகல என 7 மாவட்டங்களையும் இணைத்து 46 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் பாத யாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக கருதப்படுகின்றது.

கடந்த 23 வருடங்களாக சைவ மரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாத யாத்திரை கதிர்காமக் கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் காலை நடைபெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து மோகன் சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாத யாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டதோடு,

ஆரம்பமாகியுள்ள பாத யாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்த பின்னர் அங்கிருந்து வழமையாக பயணிக்கும் நூறு பக்தர்களுடன் பாதயாத்திரை தொடர்ந்து இடம்பெறும்.

பாத யாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாத யாத்திரைக் குழுத்தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.

இதேவேளை கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் இன்று நடைபெறவிருக்கிறது.

யூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று யூலை 4ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் உற்சவம் தொடர்பான இறுதி முடிவுகள் காட்டுப்பாதை திறப்பு உற்சவ காலம் பெரஹரா தொடர்பிலான இறுதிக்கட்ட தீர்மானங்கள் மொனராகல மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

1972ஆம்ஆண்டில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக்ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவடிவில் ஆரம்பித்தார்.

அதன்தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வுபெற்றதும் அவர்தாங்கி வந்த வேலை காரைதீவைச் சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து 21வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்று வந்தது.கடந்த இரண்டு வருடங்களாக ஜெயா வேல்சாமி இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் வெருகலிலிருந்து இது இடம்பெற்றது. எனினும் நாட்டின் அமைதிநிலவிய பிற்பாடு 2012 முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

  • யாழ். நிருபர் பிரதீபன்-
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...