Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் மறைமுக மத்தியஸ்தராக சொல்ஹெய்ம்?

T

The Leader Desk

டிசம்பர் 20, 2022 • 6:35 AM

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் மறைமுக மத்தியஸ்தராக சொல்ஹெய்ம்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கடந்த 13ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய சர்வகட்சி கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
  • இதன் பின்னர் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார் சொல்ஹெய்ம்.
  • அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனையும் அவர் சந்தித்திருந்தார்.
எழுத்து அளவு:

எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போது நோர்வே சார்பில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றியிருந்தவர் எரிக் சொல்ஹெய்ம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் காலநிலை தொடர்பான தூதுவராக அவர் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 13ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய சர்வகட்சி கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தார் சொல்ஹெய்ம். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 ஆம் திகதி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனையும் அவர் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

சர்வகட்சி கலந்துரையாடலுக்கான பின்னணி ஏற்பாடுகளைத் தொடர்வது பற்றியே இந்தப் பேச்சுக்களின்போது அதிகளவு அக்கறையை எரிக் சொல்ஹெய்ம் வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. மறைமுகமான மத்தியஸ்தராகவே அவரது இந்தச் சந்திப்புக்கள் அமைந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் மறைமுக மத்தியஸ்தராக சொல்ஹெய்ம்? | Tamil Leader | We Lead the Nation