Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

சம்பந்தனின் கருத்துக்கு கண்டனம்

T

The Leader Desk

டிசம்பர் 18, 2022 • 4:55 PM

சம்பந்தனின் கருத்துக்கு கண்டனம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  • காட்டிற்கு போகிற நேரத்தில் வீட்டிற்கு போகாமல் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று நீதியினை கோரும் போது எங்களுக்கு பின்னால் நின்று நாங்களும் இந்த போராட்டத்தில் பங்குபற்றுவதாக கூறி ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற நினைப்பது ஏன்?
  • கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எங்களின் போராட்டத்தின் உண்மையையும், நீதியையும் மறைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்மந்தன்  சர்வகட்சி கூட்டத்தில் ஒரு விடயம் கூறியிருக்கிறார்.

என்னவெனில் நீங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரையும் கொன்று விட்டீர்கள் அதற்கான பொறுப்புக்கூறலை நிச்சயமாக கூற வேண்டும் என்று கூறியிருக்கிறரர்.

இவ்வளவு காலமும் வாய் திறந்து பேசாத இந்த சம்மந்தன் சர்வகட்சி கூட்டத்தில்  இந்த பொறுப்புக்கூறலை ஏன் கூற வேண்டும் என்ற கேள்வியினை பாதிக்கப்பட்ட தாய்மார்களாக கேட்டு நிற்கின்றோம்.

கொடூர அழிப்பும், யுத்தமும் நடைபெற்ற காலப்பகுதியிலே இந்த அரசாங்கத்திற்கு துணை போனாரா?இல்லையேல் இன அழிப்பிற்கு ஐவரும் சம்மந்தப்பட்டவரா? என்ற கேள்விகள் எங்களிடம் இருக்கிறது.

உண்மையில் எங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சம்மந்தன் இவ்வளவு காலமும் தெரியப்படுத்தாமல் இருந்ததற்கு காரணம் என்ன? காட்டிற்கு போகிற நேரத்தில் வீட்டிற்கு போகாமல் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று நீதியினை கோரும் போது எங்களுக்கு பின்னால் நின்று நாங்களும் இந்த போராட்டத்தில் பங்குபற்றுவதாக கூறி ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற நினைப்பது ஏன்?

எங்களுக்காக பேச வேண்டிய நீங்கள் இப்படியான வார்த்தைகளை கூறி  ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற முயலாதீர்கள். இது ஒரு போதும் நடக்காது.

இனி ஒட்டுமொத்த தமிழர்களும் விழிப்பாக இருப்பார்கள். பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரில் நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம். எங்கள் உண்மை நிலையினை கூறாமல் ஏழை தாய்மார்களை, கணவன்மாரை இழந்த பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தை வருகின்ற ஜெனிவா கூட்டத்தொடரில் தக்க வைப்பதற்கு இப்படியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.

போலியானவர்களின் வார்த்தைகளை நம்பி ஆவணங்களில் கையொப்பம் இட்டு உங்களுக்கான மரண சான்றிதழ்களையோ, ஆயிரம் ரூபாய் என போக்குவரத்திற்காக கொடுக்கிறார்களே அது தான் இழப்பீடு. அந்த ஆயிரம் ரூபாய் அங்கு ஒரு இலட்ச இழப்பீடாக பதியப்பட போகின்றது.

ஆகவே எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும் என எங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் சார்பாக உறவுகளை தேடுகின்ற அனைத்து தாய்மார்கள், தந்தைமார்கள் என அனைவருக்கும் கூறி நிற்கின்றோம்.- என்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...