Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

'தமிழர் விரும்பும் தீர்வையே நாங்கள் மனதார ஏற்போம்'

T

The Leader Desk

டிசம்பர் 20, 2022 • 4:50 PM

'தமிழர் விரும்பும் தீர்வையே நாங்கள் மனதார ஏற்போம்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும்.
  • மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி.
  • அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்" என்று> இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.
எழுத்து அளவு:

எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்" என்று> இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு> கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. சொல்ஹெய்மின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இதன் போதே சம்பந்தன் எம்.பி மேற்கண்டவாறு கூறினார்.

இச்சந்திப்பின் போது, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சி பேச்சுத் தொடர்பிலேயே அதிக நேரம் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,

"புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் பொதுவாகப் பேசினோம். விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆரம்பித்துள்ள பேச்சு, தமிழ்த் தேசியப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் ஆராய்ந்தோம்.

"ஜனாதிபதி, தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால் அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ஹெய்மிடம் தெரிவித்தேன்" என்றார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி கருத்துத் தெரிவிக்கையில், "இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதய சுத்தியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாம் ஆதரவு வழங்குவோம். அரைகுறை தீர்வை ஏற்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என்பதைச் சொல்ஹெய்மிடம் சுட்டிக்காட்டினோம்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'தமிழர் விரும்பும் தீர்வையே நாங்கள் மனதார ஏற்போம்' | Tamil Leader | We Lead the Nation