தற்போது நிலவும் பிராந்திய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைனில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் விசேட அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
பஹ்ரைன் அதிகாரிகளினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வழிகாட்டல்கள் மற்றும் எச்சரிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து, உரிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு பஹ்ரைனிலுள்ள அனைத்து இலங்கையர்களையும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அவசரத் தொடர்பு இலக்கங்கள்
உதவிகள் தேவைப்படும் இலங்கைப் பிரஜைகளுக்காகத் தூதரகத்தினால் அவசரத் தொலைபேசி இலக்கங்களும் வெளியிடப்பட்டுள்ளன:
-
அவசர உதவி இலக்கம் (Hotline): (+973) 3353 0290
-
ஜி.எம்.டி. தரங்கிகா (தூதரக இணைப்பாளர் / Attaché): (+973) 3597 0290 / (+973) 3510 6301
-
கோதமி (தொழில் எழுதுநர் / Labour Clerk): (+973) 3371 2875
பாதுகாப்பு அறிவுறுத்தல்
பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்கள் உத்தியோகபூர்வ தகவல்தொடர்பு வழிகள் ஊடாகத் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் அவசரத் தேவை ஏற்படின் உடனடியாகத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


