Tamil Leader News
முக்கியம்
ஐ.சி.சி தலைவராக மீண்டும்  ஜெய் ஷா தெரிவு!●கனேடிய பொலிஸ் சீருடையைப் போல் மாறவுள்ள இலங்கைப் பொலிஸாரின் புதிய சீருடை?●நாமல் ராஜபக்ஷவின் ரூ. 70 மில். 'கிரிஷ்' வழக்கில் புதிய திருப்பம்!●கடற்றொழிலாளர் மற்றும் கடற்படையினருக்கு சிவப்பு எச்சரிக்கை!●வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச சேவையின் பல தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம்!●BOI கணக்காய்வில் $ 7.4 பில். டொலர் முதலீட்டுப் பற்றாக்குறை அம்பலம்; எரிவாயு விலையேற்றத்தைத் தடுக்க முடியாது!●சீனச் சிறு வணிக அலைக்கு மத்தியில் உணவுத் தரப் பரிசோதனை தீவிரம்!●செஞ்சிலுவைச் சங்கத்தினால் 'RESPONSE' டிஜிட்டல் நிதி திரட்டும் திட்டம் ஆரம்பம்; தூதுவராக தனு இன்னசித்தம்பி நியமனம்!●மத்தள விமான நிலையத்தின் நட்டம் ரூ. 7,000 கோடியாக அதிகரிப்பு: புதிய முதலீட்டாளர்களைத் தேடும் பணி ஆரம்பம்!●மக்கள் வங்கியின் 9 மாத கால சாதனை இலாபம் ரூ. 52.1 பில்லியனாக அதிகரிப்பு!●
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் ரூ. 70 மில். 'கிரிஷ்' வழக்கில் புதிய திருப்பம்!

Menaka

Menaka

நவம்பர் 16, 2026 • 11:10 AM

நாமல் ராஜபக்ஷவின் ரூ. 70 மில். 'கிரிஷ்' வழக்கில் புதிய திருப்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' (Krrish) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபா நிதியைக் கையாடல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக இவழக்குத் தொடரப்பட்டுள்ளது.
  • குறித்த இரண்டு சாட்சிகளும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதுடன், வெளிவிவகார அமைச்சு ஊடாகவே அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
  • இதற்கமைய, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினமும் நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவரை நீதிமன்றத்தில் முன்னப்படுத்துமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இரண்டு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் முறைப்படி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய நிறுவனமான 'கிரிஷ்' (Krrish) நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் ரூபா நிதியைக் கையாடல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக இவழக்குத் தொடரப்பட்டுள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் தரப்புச் சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் கிடைக்கப்பெற்றுள்ளதா என்பது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பணித்துள்ளது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பின்னரே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாதியா அபர்ண சுவண்டுருபொட இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

குறித்த இரண்டு சாட்சிகளும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதுடன், வெளிவிவகார அமைச்சு ஊடாகவே அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த ஆவணங்கள் அவர்களுக்கு முறைப்படி கிடைக்கப்பெற்றுள்ளதா என்பது குறித்த உறுதிப்படுத்தல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினமும் நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவரை நீதிமன்றத்தில் முன்னப்படுத்துமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளால் நாமல் ராஜபக்ஸ இன்று நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...