சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1000 ரூபாய் வழங்க பிராந்திய பயிர்ச்செய்கை நிறுவனங்கள் (RPCs) இணங்கியுள்ளதாக ‘அருன’ என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

அதன்படி நாள் சம்பள முறைக்கேற்ப தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 1025 ரூபாய் வழங்கப்படவிருப்பதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்படை சம்பளமாக 700 ரூபாயும், EPF/ETF வழங்குவதற்கா 105 ரூபாயும், வருகைக்கான கொபடுப்பணவாக 70 ரூபாயும். உற்பத்திக் கொடுப்பணவாக 75 ரூபாயும் பறிக்கப்படும் மேலதிக கொழுந்துக்கான கொடுப்பணவாக 75 ரூபாயும் என்ற வகையில் நாள் சம்பளம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆனால்  தோட்டத் தொழிலாளிகள் 1000 ரூபாய் நாள் சம்பளம் வழங்குமாறு  2014 லிலிருந்தே கோரி வருகின்றனர். கடைசியாக ஒப்பமிடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாகவும் இந்தக் கோரிக்கையை உதாசீனம் செய்து அடிப்படை சம்பளமாக 700 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டது. எனவே தோட்ட முதலாளிமாரின் இணக்கத்தில் புதிதாக எதுவுமே நடக்கவில்லை. தொழிலாளர்களுக்கு கிடைக்காத சில கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்தில் தொங்க வைத்ததன் மூலம், 1000 தருவதாகக் கூறி தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இன்னொரு விடயம் என்னவென்றால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள EPF/ETF கொடுப்பணவு என்பது, தோட்டத் தொழிலாளர்களுக் கட்டாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமையேயன்றி தோட்ட நிறுவனங்களின் கருணையால் கிடைப்பதல்ல. அதனை சம்பளமாகக் கணக்கிடுவது அநீதியாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1000 க ஆக்குவதாக கடந்த வரவு செலவுத் திட்ட உரையின் போது மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்தார். ஆனால், 1000 நாள் சம்பளம் விடயத்தில் தம்மால் எதுவும் செய்ய முடியாதெனவும், தோட்ட நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டுமென இப்போது கூறப்படுகிறது. இந்த இரு தரப்பினரும் தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி