சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக மற்றும் கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி உட்பட இரண்டு முன்னாள் ஆளுநர்னர்களும் சஜித்தின் கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது, சஜித் பிரேமதாச தலைமையிலான 'சமகி ஜன பலவேகய' அதிகாரிகள் அவர்களை எந்த பதவியிலும் நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

​கடந்த பொதுத் தேர்தலில் கட்சியின் தேசியப் பட்டியலில் அசாத் சாலிக்கு, இடம் கிடைக்காததற்காக கட்சித் தலைவரை பலமுறை அவமதித்துள்ளார், மேலும் சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக மற்றும் கீர்த்தி தென்னகோன் ஆகியோர் கட்சிக்குள் இரண்டாவது தலைமையை முன்னிலைப்படுத்தி பிரிவுகளை உருவாக்க முயற்சித்ததனால் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை ஐ.தே.க தலைமையிலிருந்து நீக்கி, சஜித் பிரேமதாசவை நியமிக்க அரசியல் எழுச்சிக்கு தலைமை தாங்கிய ஷிரால் லக்திலக, 'சமகி ஜன பலவேகய'வை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது.

மேலும், கடந்த பொதுத் தேர்தலின்போதும் அதற்குப் பின்னரும் சமகி ஜன பலவேகயவை அதன் ஊடகப் பிரிவின் தலைவராக ராஜித கீர்த்தி தென்னகோன் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி