Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

தினேஷ் ஷாப்டர் கொலைப் பின்னணி வெளியானது: வெளிநா செல்ல பிரையன் தோமஸுக்குத் தடை

T

The Leader Desk

டிசம்பர் 17, 2022 • 4:11 AM

தினேஷ் ஷாப்டர் கொலைப் பின்னணி வெளியானது: வெளிநா செல்ல பிரையன் தோமஸுக்குத் தடை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடயத்தில், மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவு பிறப்பித்தார்.
  • பொரளை மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.பி.கே.வை 8732 என்ற காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
  • ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

விடயத்தில், மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவு பிறப்பித்தார்.

பொரளை மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.பி.கே.வை 8732 என்ற காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தினேஷ் ஷாப்டர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இதுவொரு படுகொலை என்று உறுதிப்படுத்தப்பட் நிலையில், பொரளை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்களே, கிரிக்கெட் வர்ணனையாளரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 15ஆம் திகதி மாலை கொழும்பு 07, மலர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து வெளியேறிய தினேஷ் ஷாப்டர், தனது கையடக்கத் தொலைபேசிக்கு பதிலளிக்கவில்லை என்ற காரணத்தால், தனது அலைபேசிக்குக் கிடைத்த சமிக்ஞையின் அடிப்படையில் தனது உதவியாளர் ஒருவரை பொரளை மயானத்துக்கு மனைவி அனுப்பி வைத்துள்ளார். அங்கு,  காருக்குள் வயரால் கழுத்தை நெரித்து கைகள் கட்டப்பட்ட நிலையில் தினேஷ் காணப்பட்டுள்ளார் என்று, பொரளை பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்துள்ளனர்.

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தவிர புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை, பொரளை பொலிஸார் அவரது மனைவி டானி ஷாப்டர்,  நிர்வாக அதிகாரி, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மயானத்தின் பணியாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, தினேஷ் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் காரின் மின்னணு தரவுகளையும் அவர் பயன்படுத்திய அலைபேசி, குறிப்பாக சிசிடிவி கெமரா காட்சிகளைள் குறித்தும் விசாரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரதான வாயிலின் ஊடாக அவர் தனியாக மயானத்துக்குள் பிரவேசித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வியாபார நோக்கத்துக்காக தினேஷ் ஷாப்டரால் 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தக்  கொடுக்கல் வாங்கல் விவகாரம் சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்குச் சென்ற நிலையில், கிரிக்கெட் வர்ணனையாளருக்கு எதிராக மூன்று முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தினேஷ் பதிவு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...