Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை

T

The Leader Desk

டிசம்பர் 16, 2022 • 4:12 AM

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியானதுடன் 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்அதில் 2 பேர் கடந்த வாரம் பொது வெளியில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
  • மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ள அமீர் நசீர் அந்நாட்டின் பீரிமியர் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஈரானில் மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் அமீர் நசீர் கலந்துக்கொண்டுள்ளார்.

 

இதன்போது 'கடவுளுக்கு எதிரான போர்' என்ற குற்றச்சாட்டிலும், பாதுகாப்பு வீரர்கள் பலியானதை சுட்டிக்காட்டியும் அமீருக்கு ஈரான் அரசாங்கம் மரண தண்டனை விதித்துள்ளது.

இரு மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியானதுடன் 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன்அதில் 2 பேர் கடந்த வாரம் பொது வெளியில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்குதூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளமை கால்பந்தாட்ட ரசிகர்களையும், கால்பந்தாட்ட வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கால்பந்து வீரர்களின் சர்வதேச கூட்டமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “தனது நாட்டின் பெண்களின் உரிமைகளுக்காகவும் அடிப்படை சுதந்திரத்திற்காக பிரசாரம் செய்த கால்பந்து வீரர் அமீர் நசீர், ஈரானில் மரண தண்டனையை எதிர்கொள்கிறார் என்ற அறிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

அமீருக்கு நாங்கள் துணை நிற்கிறோம். அவரது தண்டனையை உடனடியாக நீக்க வேண்டுகோள் விடுக்கிறோம் என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...