Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் உயிரிழப்பு

T

The Leader Desk

டிசம்பர் 16, 2022 • 3:36 AM

கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் உயிரிழப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
  • அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனைவி அவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது, வர்த்தகரின் தொலைபேசி இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் குறித்த வர்த்தகர் கடத்தப்பட்டு இன்று மாலை பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:

அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் குறித்த வர்த்தகர் கடத்தப்பட்டு இன்று மாலை பொரள்ளை மயானத்தில் கார் ஒன்றிற்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த போதிலும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த வர்த்தகர் காணாமல் போனமை மற்றும் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பல கோடி ரூபா கடன் தொகை ஒன்றை வழங்கப் போவதாக தனது மனைவியிடம் அவர் கூறிவிட்டு கறுவாத்தோட்டம் ப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மனைவி அவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது, வர்த்தகரின் தொலைபேசி இயங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி ஊடாக கிடைத்த சிக்னல்களுக்கு அமைய விசாரணை நடத்திய போது அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்திற்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் சந்தேகமடைந்த அவரது மனைவி, விரைந்து செயற்பட்டு நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரிடம் கூறி பொரள்ளை மயானத்திற்கு அருகில் பார்க்குமாறு அனுப்பி வைத்துள்ளார்.

இதன்போது, அங்கிருந்த காரொன்றில், தினேஷ் சாப்டர் கைகள் கட்டப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அங்கு சாரதியும் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தினேஷ் சாப்டர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி இன்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகர் உயிரிழப்பு | Tamil Leader | We Lead the Nation