Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

ரணில் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி தேவையில்லையென நாமல் அறிவிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 16, 2022 • 3:28 AM

ரணில் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி தேவையில்லையென நாமல் அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்கக் கூடாது என முடிவு எடுத்துவிட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
  • ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது நான் அமைச்சரவைக்கு வருவதில்லை என்று கூறினேன்” எனக் குறிப்பிட்டார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எழுத்து அளவு:

ஏற்கக் கூடாது என முடிவு எடுத்துவிட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதன்போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்லும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “நான் கோட்டாய ராஜபக்ஷவின் அமைச்சரவையில் இருந்து விலகினேன். ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது நான் அமைச்சரவைக்கு வருவதில்லை என்று கூறினேன்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த நாமல், “வாழ்நாளில் பிரிய மாட்டோம் என்று கூறியவர்களே இன்று பிரிந்துள்ளனர். இதுவே அரசியல். நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஜனாதிபதி கடும் முயற்சி செய்கின்றார். அரசியல் ரீதியாக எவ்வாறு செயற்படுவது என்பதை நாம் எதிர்காலத்தில் பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...