மியன்மாரில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக மூன்று முப்படைக் குழுக்கள் நாளை (05)
சிறப்பு விமானத்தில் மியன்மாருக்குப் புறப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி வழங்க மருத்துவக் குழுவொன்றும் புறப்படத் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று நிக்காயாக்களின் மஹாநாயக்கத் தேரர்கள் தலைமையில் சேகரிக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளும், நாளை மியான்மாருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.