சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மா அதிபர் லலித் பத்திநாயக்க சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் (நிர்வாகம்) பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த (18) இடம்பெற்ற பொலிஸ் ஆணைக்குழு அமர்வின்போது பொலிஸ் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலாந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதையடுத்து, அந்த பதவியின் நிர்வாக கடமைகளை தற்காலிகமாக மேற்கொள்வதற்கு பொருத்தமான அதிகாரியை சிபாரிசு செய்து அறிவிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு  பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தது.
 
இதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம், பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின்றி பிரதி பொலிஸ் மா அதிபரை (நிர்வாகம்) நியமிக்கும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணிபுரியும் லலித் பதிநாயக்க, தற்போது பதவியில் இருக்கும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி