பல்கலைக்கழக கல்விசாரா பணியாட் தொகுதியினரின்

தொடர்ச்சியான வேலை நிறுத்தம் பற்றியும் அதன் காரணமாக பல்கலைக்கழக முறைமைக்குள் தோன்றியுள்ள சிக்கலான நிலைமை பற்றியும் இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றி அவர்,

அரச பல்கலைக்கழகங்களில் 13,000க்கு அண்மித்த கல்விசாரா பணியாட் தொகுதியினரால் மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் ஒரு மாத காலமாக தொடர்ச்சியான வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான முரண்பாடுகள் அத்துடன் அவை சார்ந்த சிக்கல்கள்> வரிக்கொள்கைகள் காரணமாக தோன்றியுள்ள சிக்கல்கள் முதலியவை இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

அதன் காரணமாக கல்வி அலுவல்கள், பரீட்சை அலுவல்கள், பட்டமளிப்பு வைபவங்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக முறைமையின் அனைத்துப் பணிகளும் முற்றாகவே செயலிழந்து போயுள்ளன. இந்த வேலை நிறுத்த நிலைமை திடீரென தோன்றியதொன்றல்ல.

6 மாதங்களுக்கு மேற்பட்ட காலமாக மேற்படி பணியாட் தொகுதியின் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற பல்கலைக்கழக ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களின் குழுவினால் தொழில்சார் சிக்கல்கள் சம்பந்தமாகவும் தீர்க்கப்படாத நிலைமையினால் உருவாகியுள்ள நிலைமையைப் பற்றியும் அமைச்சர்களுடனும் நிர்வாகத்துடனும் கடிதப் பரிமாற்றங்களை மேற்கொள்ளல் போன்றே பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இறுதியில் பல்கலைக்கழக கல்விசாரா பணியாட்டொகுதியினர் வேலை நிறுத்தமொன்றுக்கு தள்ளப்படும்வரையில் அது சம்பந்தமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு கிடைக்கவில்லை என்பது புலனாகிறது.

பல்கலைக்கழகமொன்றின் அடிப்படை நோக்கமானது மாணவர் சமுதாயத்தின் அறிவு மேம்பாட்டுக்கான கல்விச் செயற்பாங்காக அமைந்தபோதிலும் அதனோடு தொடர்புடைய உட்கட்டமைப்பும் வசதிகளினதும் சார்ந்த சேவை வழங்கல்களினதும் பொறுப்பு கல்விசாரா பணியாட்டொகுதியினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முறைமையை இயல்பு நிலையில் பேணிவருவதற்காக இந்த அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கவேண்டியது அத்தியாவசியமாகும்.

அதனால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை இடையறாமலும் தரமிக்கதாகவும் பேணிவருவதற்காக கல்விசாரா பணியாட்டொகுதியினரின் சிக்கல்கள் துரிதமாக தீர்க்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. குறிப்பாக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் பரீட்சை அலுவல்களும் தாமதிக்கின்றமையானது பொருளாதார சிரமங்கள் நிலவுகின்ற இவ்வாறான காலகட்டத்தில் கல்வி அலுவல்களில் ஈடுபட்டுள்ள அவர்களின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்துவது போன்றே பெற்றோர் மீது சுமத்தப்படுகின்ற சுமையையும் அதிகரிக்கின்றது.

இந்த நிலைமையின் கீழ் தோன்றுகின்ற பின்வரும் சிக்கல்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் இந்த சபையில் பதிலளிப்பாரென எதிர்பார்க்கிறேன்.

  1. வேலை நிறுத்த செயற்பாட்டிற்கு முன்னர் பல்கலைக்கழக கல்விசாரா பணியாட்தொகுயினரின் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா? நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின்; அவை ஏன் தீர்வுகளாக அமையவில்லை

  2. வேலை நிறுத்தம் ஒரு மாதகாலமாக நீடித்துச்சென்று ஒட்டுமொத்த பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கைக்கு ஏற்படுத்திய தாக்கம் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு புரிந்துணர்வு இருக்கின்றதா?

  3. ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து நிலவுகின்ற வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருதல் தொடர்பாக இன்றளவில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? அதற்கான காலச்சட்டகம் என்ன?

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி