இந்த வருடம் கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய

மாணவர்களுக்கான க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4 ஆம் வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.

இது தொடர்பான சுற்றறிக்கை மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைக்காத அதிபர்கள் தேவையான தகவல்களை அந்தந்த மாகாண மற்றும் பிரதேச அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தகவல் தேவைப்படும் மாணவர்கள் இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி