ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சுங் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக  தனது உத்தியோகபூர்வ எக்ஸ்  கணக்கில் அமெரிக்க தூதுவர்  தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மத்திய வங்கியின் தலைவர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கும்  அந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குக்குமிடையில்  சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் தற்போதைய சீர்திருத்தங்கள் குறித்து அங்கு விவாதிக்கப்பட்டதாக அமெரிக்க தூதர் தனது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வலுவான மற்றும் ஆற்றல்மிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி