தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதத்தை இலங்கையின் 85 சதவீதமான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என 'வெரிட்டே ரிசர்ச்'

வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

வெரிட்டே ரிசேர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய 'தேசத்தின் மனநிலை' கருத்துக்கணிப்பின்படி, 2023 ஒக்டோபர் மாதத்தில் 9%ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம், 2024 பெப்ரவரியில் 7%ஆக குறைந்துள்ளது என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது அல்லது நல்ல நிலையில் உள்ளது என 9 சதவீதமானவர்கள் மட்டுமே மதிப்பிட்டதாகக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. இது 2023 ஒக்டோபரில் 16 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து வருவதாக 90% கருதுகின்றனர். அதேவேளை 2023 ஒக்டோபரில் 66% மட்டுமே இவ்வாறான எதிர்மறையான பார்வையைக் கொண்டிருந்தனர் என்று, அந்தக் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி