ஐமசவின் எம்பிக்கள் குழுவொன்று, மிக விரைவில் ஐதேகவில் இணையவுள்ளனர் என்று பலமுறை சொன்னாலும், அதுவும் “இன்று போய்,

நாளை வா!” என்ற கதையாகிவிட்டது. எவ்வாறாயினும், எதிர்க் கட்சிகளாக இருக்கும் அனைத்துக் கட்சிகளையும், தனித்தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ இணைத்துக்கொள்ளும் தீர்மானத்தை, சஜித் எடுத்திருக்கிறார்.

ஆனால், கட்சி அல்லது கூட்டணியாக இணைத்துக்கொள்வதே தவிர, அந்தந்தக் கட்சிகள் அல்லது கூட்டணியில் உள்ளவர்களை, ஒருவர் இருவராக இணைத்துக்கொள்வதில்லை என்ற தீர்மானத்தை எடுக்குமாறு, எதிர்க்கட்சியிலுள்ள ஏனைய தலைவர்கள், சஜித்துக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனராம்.

“ஜீஎல், நாலக்க என்று தனித்தனியாக அவர்களை இணைத்துக்கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக டலஸ் குழுவையே இணைத்துக்கொண்டிருந்தால், ஒட்டுமொத்தமாக 13 எம்பிக்கள் கிடைத்திருப்பார்கள்” என்று, டிலான் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், எந்த தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், வெளியில் இருந்து உருவாகும் கூட்டணிகள், ஐமச கூட்டணியில் நேரடியாக சேர்க்கப்பட உள்ளன. சஜித் சமீபத்தில் பல எதிர்க்கட்சி தலைவர்களுடன் இது குறித்து விவாதித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இம்மாதம் 20-ம் திகதி கொழும்பில் புதிய அரசியல் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு இணக்கமான அரசியல் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் தயாசிறி கூறுகிறார். அப்படியென்றால், இறுதியில் சஜித்தை தோற்கடிக்கும் கூட்டணியை நிறுவ தயாசிறி முயற்சி செய்கிறார் என்று அர்த்தமா என, சிலர் கேள்வி கேட்கவும் ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலும் அது அப்படித்தான் இருக்கும்.

ஆனால் அரசியல் களம் மாறுகிறது. ஒரு கப் காபிக்குப் பிறகும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசியல்வாதிகளின் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், அதில் தவறில்லை. ஏனென்றால், எந்த அண்ணன் வெற்றிபெற்றாலும், தேர்தலுக்குப் பிறகு மக்கள் மன அழுத்தத்தில்தான் இருக்கப்போகிறார்கள். எனவே, தேர்தலுக்கு முன்பேனும், அரசியல்வாதிகளுக்கு அந்த அனுபவம் கிடைப்பதில் தவறில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி