ஆசிய அபிவிருத்தி வங்கியின் கவனத்தை நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மீது செலுத்திவிட்டு, உறங்கிக்கொண்டிருந்த

அரசாங்கம், ஐக்கிய மக்கள் சக்தியினால் விழித்தெழுந்தமை, முழு நாட்டிற்கும் தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி என்ற ரீதியில், பராட்டே சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

சமகி ஜன பலவேகய கட்சியினால், பராட்டே சட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து அரசாங்கத்துக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக, 2024 பெப்ரவரி 24ஆம் திகதியன்று, அச்சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தீர்மானத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றால், அன்றைய தினமே உறுதி செய்திருக்க முடியும் எனவும் அமைச்சரவை அதனை செய்யவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், பிப்ரவரி 27-ம் திகதி வெளியிடப்படவேண்டிய வர்த்தமானி அறிவித்தல், மார்ச் 13ஆம் திகதியு வெளியிடப்பட்டதென்றும் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி