ஹப்புத்தளை மற்றும் தியத்தலாரவ இடையிலான தண்டவாளத்தின் மீது இன்று (19) அதிகாலை மண் மேடு சரிந்து விழுந்ததில்,

மலையகத்துக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு – பதுளை வரையான இரவுநேர தபால் ரயில் சேவை, ஹப்புத்தளை வரை மாத்திரமே இடம்பெற்றுள்ளதெனத் தெரியவருகிறது.

இந்தச் சம்பவத்தால், இன்று இடம்பெறும் உடரட்ட மெனிக்கே மற்றும் பொடி மெனிக்கே ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படுமென்ற, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், இன்று அதிகாலை 5.45க்கு பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை இடம்பெறவிருந்த உடரட்ட மெனிக்கே ரயில் சேவை இதுவரையில் புறப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், காலை 8.30 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படவிருந்த பொடி மெனிக்கே ரயில் சேவையில், சில மணி நேரங்கள் வரை தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், தண்டவாளத்தில் உடைந்து விழுந்துள்ள மண் மேட்டை அகற்றும் பணிகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி