Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

Turning Point - போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பில் நினைவுகூரல்!

T

The Leader Desk

மே 19, 2024 • 3:56 AM

Turning Point - போரில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பில் நினைவுகூரல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காணாமல் போனவர்களையும் நினைவு கூரும் நிகழ்வு கொழும்பு 7, விஹார மகாதேவி பூங்காவில் இடம்பெற்றது.வடக்கிலும் தெற்கிலும் முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் நினைவு கூரும் நிகழ்வு கொழும்பு 7, விஹார மகாதேவி பூங்காவில் இடம்பெற்றது.
  • முக்கிய உரைகளை கொழும்பு இளம் பௌத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜெயசேகர மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வநாயகம் அறக்கட்டளையின் பணிப்பாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆற்றினர்.
  • வடக்கையும் தெற்கையும் தனித்தனியாகப் பிரித்து நினைவு கூராமல் உயிரிழந்த அனைவரையும் ஒன்றாக நினைவு கூர்ந்து, வென்ற அமைதியை மேலும் பாதுகாத்து ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்வது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
எழுத்து அளவு:

காணாமல் போனவர்களையும்  நினைவு கூரும் நிகழ்வு கொழும்பு 7, விஹார மகாதேவி பூங்காவில்  இடம்பெற்றது.வடக்கிலும் தெற்கிலும் முப்பது வருடகால யுத்தத்தில் உயிரிழந்தவர்களையும்  காணாமல் போனவர்களையும்  நினைவு கூரும் நிகழ்வு கொழும்பு 7, விஹார மகாதேவி பூங்காவில்  இடம்பெற்றது.

வடக்கையும் தெற்கையும் தனித்தனியாகப் பிரித்து நினைவு கூராமல் உயிரிழந்த  அனைவரையும் ஒன்றாக நினைவு கூர்ந்து, வென்ற அமைதியை மேலும் பாதுகாத்து ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்வது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம், குளோபல் தமிழ் மன்றம், கொழும்பு இளம் பௌத்த சங்கம், யாழ்ப்பாணம்  செல்வநாயகம் அறக்கட்டளை, தர்மசக்தி அமைப்பு, சங்கம்  போன்ற அமைப்புக்கள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் இணைந்து இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தன.

முக்கிய உரைகளை கொழும்பு இளம் பௌத்த சங்கத்தின் தலைவர் மகேந்திர ஜெயசேகர மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வநாயகம் அறக்கட்டளையின் பணிப்பாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் ஆற்றினர்.

இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சிறிபால அமரசிங்க உட்பட பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர்.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட அலுவலகத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான பிரதான ஆலோசகர் Patrick McCarthy இராஜதந்திர மட்டத்தில் தனது கருத்துக்களை வெளியிட்டார்.  

மஹா சங்கத்தினர்  ஏராளமான கத்தோலிக்க, இந்து,  இஸ்லாமிய மதகுருமார்கள் மற்றும் சுவிஸ் தூதர் மற்றும் ஊழியர்கள், ஜப்பானிய தூதரகத்தின் பிரதிநிதிகள், அமெரிக்க தூதரக பிரதிநிதிகள், தாய்மார்கள் மற்றும் வடக்கு மற்றும் தெற்கு மக்கள், ஒன்று கூடினர். இறந்தவர்களின் நினைவாக தீபம் ஏற்றினர்.

VP 1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...