Tamil Leader News
முக்கியம்
தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●நியூயோர்க் வரலாற்று மராத்தான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை வீரர்!●காட்டு யானைகளை விரட்ட பயமுறுத்துவதா, 'பண்பாகப் பேசுவதா' சாத்தியம்?●குமண வனத்துக்குள் இரகசிய இரவு நேர சஃபாரி: கடுமையான குற்றச்சாட்டுகள்!● SLIIT கல்வி நிறுவனத்தை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதில் உள்ள நெருக்கடி!●இராணுவப் பயிற்சி நிலத்துக்கு பசுக்களை அனுப்புமாறு அதிகாரிகள் உத்தரவு: விவசாயிகள் கடும் அவதி!●பட்ஜெட் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் 8 ஆண்டுகளின் முன்னேற்றம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்துக்கு அரசாங்கத்திடம் இருந்து பல முக்கிய திருத்தங்கள்!●'பயங்கரவாதம்' எனும் சொல்லாடலும் இலங்கை அரசியலும்!●
செய்திகள்

IS அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையர் நால்வர் இந்தியாவில் கைது!

T

The Leader Desk

மே 20, 2024 • 6:10 PM

IS அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையர் நால்வர்  இந்தியாவில் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நான்கு இலங்கையர்களை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
  • இவர்கள் நால்வரும் இலங்கையிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
எழுத்து அளவு:

நான்கு இலங்கையர்களை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் நால்வரும் இலங்கையிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
 
இந்த நான்கு இலங்கையர்களுக்கும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. 
 
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், எந்த இடத்துக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவரவில்லை.
 
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் மூன்று அணிகள் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு வரவிருந்ததாகவும், அதன் காரணமாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி,  இந்த சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்திய தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டிருந்த போதிலும், எதற்காக என்பது உறுதிப்படுத்தப்படவில்லை
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...