Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

IMF விவகாரம்: ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2024 • 5:01 PM

IMF விவகாரம்: ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாக்க உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறது.
  • அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண மக்களை பாதிக்கின்ற நிபந்தனைகள் குறித்து, அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளை முன் வைத்திருக்கின்றது.
  • சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் என்று நாட்டு மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையான கருத்தாக இருக்கவில்லை என்பது எமக்குத் தெரியும்.
எழுத்து அளவு:

இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள  ஒப்பந்தம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்தும் சர்வதேச நாணய நிதியத்துடன் வீடியோ   கலந்துரையாடலை மேற்கொள்ள தான் தயார் என்றும், இதில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட தரப்பினருக்கு  இந்த கலந்துரையாடலில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்க முடியும் என்றும்  ஐக்கிய தேசியக் கட்சியின்  கடசி மாநாட்டின்போது  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பொருளாதார பிரச்சினையை  புரிந்து கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன்  கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று  2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தெரிவித்திருந்தது.
 
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் கட்சியின்  பொருளாதாரக் கொள்கை  வகுப்பாக்க உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறது.
 
அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண மக்களை பாதிக்கின்ற  நிபந்தனைகள் குறித்து,  அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள்  சக்தி ஆலோசனைகளை முன் வைத்திருக்கின்றது.
 
சர்வதேச நாணய நிதியத்தின்   பரிந்துரைகள் மற்றும்  நிபந்தனைகள் என்று நாட்டு மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்  செயற்பாடானது சர்வதேச நாணய நிதியத்தின்  உண்மையான கருத்தாக இருக்கவில்லை என்பது  எமக்குத் தெரியும்.
 
எனவே, எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறான கலந்துரையாடலாக இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தி அதற்குத் தயார் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
ரஞ்சித் மத்தும பண்டார(பா.உ) 
பொதுச் செயலாளர் 
ஐக்கிய மக்கள் சக்தி
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

IMF விவகாரம்: ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை! | Tamil Leader | We Lead the Nation