Tamil Leader News
முக்கியம்
இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●சிங்கராஜ காட்டில் மரபணுத் திருட்டு: நான்கு சீனர்கள் கைது!●
செய்திகள்

பாதாள உலக நபருக்கு பொலிஸாரின் உயரடுக்குப் பாதுகாப்பு: விசாரணைக்கு உத்தரவிட்ட IGP

T

The Leader Desk

ஜூலை 4, 2024 • 4:24 AM

பாதாள உலக நபருக்கு பொலிஸாரின் உயரடுக்குப் பாதுகாப்பு: விசாரணைக்கு உத்தரவிட்ட IGP

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகக் கும்பலுடன் தொடர்பு வைத்து தனது கணக்கில் பணத்தை வைப்பிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை உடனடியாக விசாரணை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
  • இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை உடனடியாக சப்ரகமுவ மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
  • குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
எழுத்து அளவு:

உலகக் கும்பலுடன் தொடர்பு வைத்து தனது கணக்கில் பணத்தை வைப்பிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை உடனடியாக விசாரணை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
 
இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை உடனடியாக சப்ரகமுவ மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
 
பாதாள உலக நபர் ஒருவர் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அப்போது சந்தேக நபருக்கு பாதுகாவலர்களாக உயரடுக்கு பாதுகாப்பு பொலிஸார் பலர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
 
கைது செய்யப்பட்டவர் பாதாள உலகக் குழுத் தலைவர் ரத்கம விதுரவின் மைத்துனர் என்பது தெரிய வந்துள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்
 
இந்நிலையிலேயே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கணக்குகள் மற்றும் பாதாள உலகக் கும்பலுடன் அவர் தொடர்பு வைத்திருந்த விதம் தொடர்பான விசாரணைகளுக்கு மேலதிகமாக, பாதாள உலக நபருக்கு உயரடுக்கு பாதுகாப்பாக இருந்த பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பான விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...