Tamil Leader News
முக்கியம்
தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●
செய்திகள்

இரட்டிப்பாக அதிகரித்த HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை

T

The Leader Desk

அக்டோபர் 26, 2022 • 6:51 AM

இரட்டிப்பாக அதிகரித்த HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த வருடம் முதலாவது அரையாண்டுக்குள் 148 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.
  • எனினும், இந்த வருடம் 342 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
  • இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும் அவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் அடங்குவதாக விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கடந்த வருடம் முதலாவது அரையாண்டுக்குள் 148 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.

எனினும், இந்த வருடம் 342 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே அதிக HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த வருடம் 18  முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 25 பேர் மாத்திரமே அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த வருடம் 50 இற்கும் அதிகமான HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும் அவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேர் மற்றும் பாடசாலை மாணவர்கள் அடங்குவதாக விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

பாடசாலைகளில் பால்நிலை கல்வியை உரிய முறையில் பெற்றுக் கொடுக்காமையே இவ்வாறான தொற்று நோய்கள் அதிகம் பரவுவதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

HIV தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் நபர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்தது என தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...